spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்எதிர்கட்சிகளை மிரட்டும் பாஜக

எதிர்கட்சிகளை மிரட்டும் பாஜக

-

- Advertisement -

எதிர்கட்சிகளை மிரட்டும் பாஜக

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு எதிர்கட்சிகளை மிரட்டி ஊழல்வாதிகளாக சித்தரிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் பாரதிய ஜனதா கட்சி, இதுவரை செய்த சாதனைகளை சொல்லி மக்களிடம் வாக்குகள் கேட்பதற்கு பதிலாக எதிர் கட்சிகளை மிரட்டி, அச்சறுத்தி, முடக்கி தேர்தலை சந்திக்கின்ற முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.

we-r-hiring

ஆட்சிக்கு வந்த நாள் முதல் நல்ல காரியங்கள் எதுவும் அவர்கள் செய்யவில்லை. நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை, கெடுதலாகிலும் செய்யாமல் இருந்திருக்கலாம். செய்தது எல்லாம் கெடுதல் மட்டுமே!

எதிர்கட்சிகளை மிரட்டும் பாஜக

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு,  வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவதாக வாக்குறுதி அளித்தார்கள். ஆட்சிக்கு வந்தப் பின்னர் போண்டா, பஜ்சி சுடுவதும் வேலைதான் என்று நையாண்டி பேசி இளைஞர்களின் கனவுகளை சிதைத்தார்கள்.

எதிர்கட்சிகளை மிரட்டும் பாஜக

நாட்டில் கணக்கில் வராத கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று வாய் பந்தல் போட்டார்கள். அதுவும் எங்கே சொன்னோம்? யார் சொன்னது? என்று பேசி 15 ரூபாய் கூட வழங்கவில்லை.

எதிர்கட்சிகளை மிரட்டும் பாஜக

பாஜக தலைவர்கள் பேசியது, அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்! செய்தது அனைத்தும் மக்களுக்கு எதிரான செயல் என்பது நிருபனம் ஆகிவிட்டது.

இந்த நிலையில்  2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றிப்பெற வேண்டும் என்ற இலக்குடன் வேலை செய்து வருகின்றனர்.

எதிர்கட்சிகளை மிரட்டும் பாஜகஎப்படி வெற்றி பெறுவது?

எதிர்கட்சிகளை ஒன்று சேர விடாமல்  பார்த்துக் கொள்வது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரினாமுல் காங்கிரஸ், திமுக போன்ற எதிர் கட்சியினர் ஊழல்வாதிகள் என்ற பிம்பத்தை கட்டமைத்து, நாடு முழுவதும் அதையே பிரச்சாரமாக மாற்றுவது.

முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்குகள் பதிந்து, அவர்களை நீதிமன்றத்திற்கும், விசாரணை அலுவலகத்திற்கும் அலைய விடுவது. தேர்தலில் போட்டியிடுவதற்கோ, தேர்தல் வேலை செய்வதற்கோ கற்பனைக் கூட செய்து விடக்கூடாது. இதுதான் பாஜகவின் திட்டம்.

எதிர்கட்சிகளை மிரட்டும் பாஜக

முதல் வேலையாக நாடு முழுவதும் மக்கள் செல்வாக்கு உள்ள தலைவராகவும், நாட்டின் அடுத்த பிரதமர் என்று பேசப்பட்டு வந்த ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிந்தார்கள்.

அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கி, அவருடைய எம்.பி. பதவியை பறித்தார்கள். அவரை ஆறு ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடைவிதித்து மகிழ்ந்தார்கள்.

எதிர்கட்சிகளை மிரட்டும் பாஜக

அதற்கு அடுத்து டெல்லி, பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ள  ஆம் ஆத்மி கட்சியை குறிவைத்தார்கள். நாடு முழுவதும் ஓரளவு செல்வாக்கு உள்ள ஆம் ஆத்மி கட்சியை மிரட்ட அமலாக்கத்துறையை அனுப்பினார்கள். அந்த கட்சியை சேர்ந்த சத்தியேந்தர குமார் ஜெயின், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா போன்றவர்களை ஊழல் வழக்கில் சிறையில் தள்ளினார்கள்.

பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவிற்கும் சிம்மசொப்பனமாக இருந்து வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாபானர்ஜி அமைச்சரவையில் 8 அமைச்சர்களை ஊழல் வழக்கில் கைது செய்துள்ளனர்.

எதிர்கட்சிகளை மிரட்டும் பாஜக

ஆனால், மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஏக்னாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவாரை அமலாக்கத்துறையை வைத்து மிரட்டினார்கள். வழக்கு பதிவு செய்தார்கள். அவர்கள் பாஜக வாசலில் வாலாட்டியதும் ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டு முதலமைச்சர், துணை முதலமைசாசர் பதவி வழங்கி நேர்மையின் சிகரமாக மாற்றிவிட்டனர்.

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்தார். அவருக்கு உறுதுணையாக இருப்பவர் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ். அவருடை வீட்டில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவரை கைது செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.

இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள் ஒருங்கிணைவதற்கு திமுக முக்கிய பங்காற்றி வருகிறது. தற்போது திமுகவை அமைச்சரவையில் உள்ள செந்தில் பாலாஜி, பொன்முடி போன்ற முக்கிய அமைச்சர்களை குறிவைத்து கைது செய்து வருகின்றனர்.

எதிர்கட்சிகளை மிரட்டும் பாஜக

பத்தாண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணை நடத்தி கைது செய்து வருகின்றனர். நாட்டின் புலனாய்வுத்துறை, நீதித்துறை போன்ற தன்னாட்சி அமைப்புகள் மீது மக்களுக்கு சந்தேகம் எழத்தொடங்கியுள்ளது.

இனியும் பாஜக ஆட்சியில் இருந்தால் ஜனநாயகம் அழிவுப் பாதைக்கு சென்றுவிடும். நாடு தாங்காது என்ற மனநிலைக்கு எதிர்கட்சி தலைவர்கள் வந்துவிட்டார்கள்.

நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டும். அதற்கு அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கையுள்ள கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டுள்ளனர்.

இந்த கூட்டணி வெற்றிப் பெற்றால் ஜனநாயகம் ஓரளவு தப்பிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அது பாஜகவிற்கு பாடமாக அமையும்.

MUST READ