spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்திமுக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக செயல்பட்டு வருகிறது - கனிமொழி கருணாநிதி 

திமுக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக செயல்பட்டு வருகிறது – கனிமொழி கருணாநிதி 

-

- Advertisement -

திமுக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக செயல்பட்டு வருகிறது - கனிமொழி கருணாநிதி திமுக ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்கம்.என தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழுவின் தென் மண்டல ஆய்வுக் கூட்டத்தில் பேசிய திமுக துணை பொது செயலாளர் கனிமொழி கருணாநிதி இதனை தெரிவித்தார்.

திமுக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு தென்மண்டல ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது திமுக ஆதிதிராவிடர் நல்லக்குழுவின் மாநில செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தை திமுக துணை பொது செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த ஆய்வு கூட்டத்தை தொடங்கி வைத்து திமுக மூத்த முன்னோடிகள் 100 பேருக்கு பொற்கிழிகளை வழங்கினார்கள்.

we-r-hiring

இதைத்தொடர்ந்து பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி,” திராவிட இயக்கம் மற்றும் திமுக ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக யாருக்கெல்லாம் காலம் காலமாக கல்வி உரிமை எல்லாம் மறுக்கப்பட்டதோ அந்த மக்களின் குரலாகத்தான் திராவிட இயக்கம் தோன்றியது. அண்ணா காலம் முதல் தற்போது உள்ள முதல்வர் மு க ஸ்டாலின் காலம் வரை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறது.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். அது சுயமரியாதையாக கிடைக்க வேண்டும். திராவிட முன்னேற்ற கழகத்திற்கு விமர்சனங்கள் காலம் காலமாக வந்து கொண்டிருக்கிறது. நாம் அதை எதிர் கொள்ள வேண்டும். அனைத்து மக்களும் ஒரே இடத்தில் வாழ வேண்டும் என்று உருவாக்கியது தான் சமத்துவபுரம். அதை உருவாக்கியவர் கலைஞர் அவர்கள். இதை வேறு எந்த தலைவரும் செய்யவில்லை. ஜாதி மத பேதமின்றி அனைவரும் ஒரே இடத்தில் வாழ முடியும் என எடுத்துக்காட்டியவர் தலைவர் கலைஞர் அவர்கள். ஒதுக்கப்பட்ட மக்களுக்காக 17 சதவீத இட ஒதுக்கீட்டை உருவாக்கியவர் கலைஞர் அவர்கள். குடிசை வீடுகளில் இருந்தவர்களை வீடு கட்டி தந்தவர், குடிசை மாற்று வாரியத்தை தந்தவர் கலைஞர் அவர்கள். அவரின் வழியில் இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றியவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காக என்ன செய்தது என்று கேள்விகள் அடுத்த மாதம் முதல் தொடங்கும். வாட்ஸ்அப் குழுவில் அதை பதிவிட ஒரு அமைப்பு இருப்பார்கள். நாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
பல மாநிலங்களில் மக்களை ஜாதி வாரியாக பிரித்து தான் கட்சிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதே போல் தமிழ்நாட்டிலும் இதே குழப்பங்களை கட்சியினர் செய்ய முயற்சி செய்வார்கள். ஆனால் இது தந்தை பெரியாரின் மண், திராவிட இயக்கத்தின் மண், டாக்டர் கலைஞரின் மண். இதையெல்லாம் மக்கள் நம்ப தயாராக இல்லை. இருந்தாலும் மக்களுக்கு நாம் அதை தெளிவாக நேரடியாக சொல்ல வேண்டும்.

இன்னைக்கு வாய்சவடால் எல்லாம் நிறைய வரலாம். ஆனால் நிஜத்தில் என்ன வரும் என்பது தெரியாது. இப்படி பேசியவர்கள் யாரும் ஒன்றும் செய்து காட்டியது இல்லை. அதை நாம் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். திண்ணை பிரச்சாரங்கள், தெருமுனை பிரச்சாரங்கள், வீடு வீடாக சென்று திமுகவின் சாதனைகளை எடுத்துரையுங்கள், என தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா மார்கண்டையன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி திமுக ஆயிரத்து நலக்குழு இணைச் செயலாளர் வி பி ராசன் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மருதூர் ராமலிங்கம் மற்றும் 21 மாவட்டங்களில் இருந்து திமுக ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டிருக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி

MUST READ