கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் அதிரடியாக சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. மேலும் உச்சநீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் கரூரில் செப்டம்பர் 27ல் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தை, பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வில்லிவாக்கத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தாா். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில், சிறப்பு பலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து தவெக தரப்பில் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பாராபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கடந்த 8 ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல், கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து பாஜகவின் உமா ஆனந்தன் கடந்த 7-ம் தேதி தொடர்ந்த மேல்முறையீட்டு மனவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு , இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 10 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர். அதன் அடிப்படையில், இந்த வழக்கு அக்டோபர் 10ம் தேதி அன்று நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கு தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் அனல் பரக்க வாதங்கள் நடைபெற்றது. பின்னர் அரசு தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தும் இன்னும் பற மனுதாரர்கள் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யவும் அனுமதி அளித்து தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்நிலையில் இன்று அதிரடியாக தீர்பு வழங்கி உச்சநீதி மன்றம் இந்த வழக்கை சிபிஐ மாற்றி உத்தரவிட்டது. மேலும் மேலும் உச்சநீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.
விஜய் A1! ஆதவ் A2! மதியழகன் உடைத்த ரகசியம்! விசாரணையில் திடுக்கிடும் உண்மை வெளியானது!