Homeசெய்திகள்வீராங்கனையான மாணவிக்கு செயற்கை கால்…துணை முதல்வருக்கு நெஞ்சாா்ந்த நன்றி…

வீராங்கனையான மாணவிக்கு செயற்கை கால்…துணை முதல்வருக்கு நெஞ்சாா்ந்த நன்றி…

-

- Advertisement -

கைப்பந்து, குண்டு எறிதல் மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை குண்டு எறிதல் போட்டியில் மாற்றுத்திறனாளி மாணவி தங்கம் வென்றுள்ளார். செயற்கை கால் கேட்டு கோரிக்கை மனு அளித்துள்ளார்.வீராங்கனையான மாணவிக்கு செயற்கை கால்…துணை முதல்வருக்கு நெஞ்சாா்ந்த நன்றி…திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம் ஒபுளாபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி செல்வி.ஏ.ராஜலட்சுமி அவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படித்து வருகிறார். அவர் கைப்பந்து, குண்டு எறிதல் போன்ற விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். மேலும், மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

அவர் ஒரு விபத்தில் தனது காலினை இழந்துள்ளார். செயற்கை கால் கிடைத்தால் பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்கு உதவிகரமாக இருக்கும் என்று மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களிடம் செயற்கை கால் கேட்டு கோரிக்கை மனு அளித்துள்ளார். அவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்து ஆறு நாட்களில் மாணவி செல்வி.ஏ.ராஜலட்சுமி அவரது வீட்டிற்கு நேரடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் சென்று ஆய்வு செய்தனர்.வீராங்கனையான மாணவிக்கு செயற்கை கால்…துணை முதல்வருக்கு நெஞ்சாா்ந்த நன்றி…அதன் பின்னர் அவருடைய செயற்கை கால் செய்வதற்கு உரிய அளவெடுக்கப்பட்டது. மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நேற்று (13.05.2025)  செல்வி.ஏ.ராஜலட்சுமி முகாம் அலுவலகத்தில் ரூ.1,86,000 மதிப்பிலான செயற்கைக் காலினை அம்மாணவியிடம் வழங்கினார். செயற்கைக் கால் பெற்ற மாணவி செல்வி.ஏ.ராஜலட்சுமி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

உதயநிதிக்காக தேர்தல் பிரச்சாரத்திற்கு போவீங்களா? ….. சந்தானம் சொன்ன பதில்!

we-r-hiring

 

 

MUST READ