spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுலாரி மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஆசிாியா் மரணம்: சம்பவம் செய்த கிராம...

லாரி மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஆசிாியா் மரணம்: சம்பவம் செய்த கிராம மக்கள்

-

- Advertisement -

தொடர் விபத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம், அரை மணி நேரத்துக்கு மேலாக மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

லாரி மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஆசிாியா் மரணம்:  சம்பவம் செய்த கிராம மக்கள்

we-r-hiring

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே எஸ்.கல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரது மனைவி மகேஸ்வரி (32) என்பவர் இல்லம் தேடி கல்வி மாலை நேர கல்வி மைய ஆசிரியராக பணிபுரிந்து பின்னர் அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் கணினி இயக்குனராக பணிபுரிந்து வந்துள்ளாா். இந்த நிலையில் கம்பிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று பள்ளி மாணவர்களின் தரவுகளை கணினியில் பதிவேற்றம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது, மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.கல்லுப்பட்டி பகுதிகளில் சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால், எதிர் எதிரே வாகனங்கள் வந்து கொண்டிருந்தது.

அப்போது மகேஸ்வரி சென்ற டூவீலர் மீது திருநெல்வேலியைச் சேர்ந்த மகாராஜா என்பவர் மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி லாரியை ஓட்டி சென்ற போது எதிர்பாராத விதமாக மகேஸ்வரி மீது மோதியதில் மகேஸ்வரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா். சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த மாதம் இதே பகுதியில் இதை ஊரைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் இப்பகுதியில் தொடர் விபத்து நடைபெறுவதால் ஆத்திரமடைந்த எஸ்.கல்லுப்பட்டி கிராமமக்கள் மற்றும் மகேஸ்வரியின் உறவினர்கள் நான்கு வழிச்சாலையில் கற்களை வைத்து சாலையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்   மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி மதிவாணன் தலைமையிலான போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இப்பகுதியில் பேரிக்காா்டு அமைக்க ஏற்பாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் மகேஸ்வரியின் உடலை கைப்பற்றிய போலீசார் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். லாரி ஓட்டுனர் மகாராஜனை காரியாபட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவரை காரில் கடத்திச் சென்ற கும்பல்! தலைமறைவான மா்ம நபா்களால் பரபரப்பு..!

 

MUST READ