
ஆந்திராவில் இருந்து கோவைக்கு லாரியில் நூதன முறையில் கடத்தப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா சிக்கியது அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

“ஊழலுக்காகக் கலைக்கப்பட்டது தி.மு.க. அரசு”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அருகே ஆந்திராவில் இருந்து சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்த லாரியை நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட்டனர். அதில், மீன் தொட்டிகளில் மறைத்து பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தியது அம்பலமானது. சுமார் 200 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், விழுப்புரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் வெங்கடாஜலபதியை கைது செய்து விசாரணை நடத்தினர்.
“அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூபாய் 95 லட்சம் பறிமுதல்”- அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, கோவையில் கஞ்சா யாருக்கு விற்பனை செய்யப்படவிருந்தது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.


