கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின் அநாகரீகமான பேச்சுக்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.
இது குறித்து அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கோவை மாவட்ட மக்கள், அருகில் இருக்கும் ஊர் அனைத்தையும் கெடுப்பவர்கள் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசிய வீடியோ காட்சிகள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றன. தமிழகத்தில் லட்சக் கணக்கானோருக்கான வேலை வாய்ப்புகளை வழங்கி, தலைசிறந்த தொழில் நகரமாகவும், தென்னிந்தியாவின் மான்செஸ்டராகவும் கோவையை உருவாக்கிய கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறன் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துவதோடு, அதிகார மமதையில் சுற்றித் திரியும் திமுகவினருக்குக் கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே, இந்த தேர்தலிலும் கோவை மக்கள் ஒன்றிணைந்து தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.
தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கத் துடிக்கும் திமுக – டி.டி.வி.தினகரன் கண்டனம்



