
தந்தை வாங்கிய 50,000 ரூபாய் கடனுக்காக 11 வயது மகளைக் கடத்திச் சென்ற தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

“ஆளுநருக்கான மரியாதையை தமிழக அரசு வழங்கி வருகிறது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம்!
புதுக்கோட்டை மாவட்டம், மருதூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வனத்துராஜா, கீரனூரில் இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2022- ஆம் ஆண்டு 50,000 ரூபாய் கடன் பெற்றுள்ளார். மாதந்தோறும் ரூபாய் 2,500 என்ற வகையில் தவணை முறையில் கடனைத் திருப்பிச் செலுத்தி வந்துள்ளார். ஜூன் மாதத்திற்கான தவணைத் தொகையை செலுத்தாததால் பணத்தை வசூலிப்பதற்காக நிதி நிறுவனத்தின் ஊழியர் விக்னேஷ் என்பவர், வனத்து ராஜாவின் வீட்டிற்கு வந்துள்ளார்.
வனத்துராஜா வீட்டில் இல்லாததால், அவரது 11 வயது மகள் ஜனனியை அலுவலகத்திற்குத் தூக்கிச் சென்றுவிட்டு, தவணைத் தொகையைக் கட்டினால் தான் விடுவிப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து வனத்துராஜா, கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு அமல்!
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர் விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


