அன்புக் கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தாா்.
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான “அன்புக் கரங்கள்” திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் உரையாற்றிய அவர், இன்று தாய் நிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அண்ணாவின் பிறந்தநாள்.இந்நாளில் அந்த நாளில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான இந்த உதவித் திட்டத்தை தொடங்குவது ஒரு சிறப்பு.இனி இந்த குழந்தைகளுக்கு நான் இருக்கிறேன், இனி கவலை வேண்டாம் என்று உறுதியளித்தாா். திராவிட மாடல் என்றால் எல்லோருக்கும் எல்லாம். அரசியல் என்பது மக்கள் பணி, எங்களுக்கு சொகுசுக்கு இடமில்லை. இந்த அரசு செயல்படுத்தும் திட்டங்கள் எல்லாம் வாக்கு அரசியலுக்காக அல்ல மக்கள் நலனுக்காக மட்டுமே என முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.
இத்திட்டதின் மூலம், பெற்றோர் இருவரையும் இழந்த அல்லது ஒருவரை இழந்து, மாற்றொருவரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவனைத்து, தொடர்ந்து பாதுகாத்திட இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 18 வயது வரை மாதந்தோறும் அன்புக்கரங்கள் திட்டம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 6,082 மாணவர்கள் இத்திட்டத்தில் பயன் பெறவுள்ளனர்.
55,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள கோயில்… சசிகுமார் வருகை….



