spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமக்கள் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் "பத்திரிகையாளர் குரல்" …சங்கத்தின் புதிய தீர்மானம்…

மக்கள் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் “பத்திரிகையாளர் குரல்” …சங்கத்தின் புதிய தீர்மானம்…

-

- Advertisement -

பத்திரிகையாளர் சங்கத்தின் 35 வது ஆண்டு விழா குறித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மக்கள் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் "பத்திரிகையாளர் குரல்" …சங்கத்தின் புதிய தீர்மானம்…திருச்சியில், கடந்த 9ம் தேதி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் உயர்மட்ட ஆலோசனை குழு நிர்வாகிகள் மற்றும் தேசியக் குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கடலூர் ரமேஷ், பொருளாளர் திண்டுக்கல் ராமகிருஷ்ணன், திருச்சி மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட செயலாளர் விஜயகுமார், உள்ளிட்டோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை  கூட்டத்தில், பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன, அதில் முக்கியமாக, சங்கத்தின் சார்பில் வெளிவரவுள்ள “பத்திரிகையாளர் குரல்” புத்தகம்  ஜனவரி மாதத்தில் இருந்து பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில், புலனாய்வு பத்திரிகையாக, அனைத்து மாவட்டத்திலும் இருக்க கூடிய மக்கள் பிரச்சினைகளை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு கட்டும் வகையில்,  வெளிவரும் விதத்தில் வடிவமைக்கப்படும் எனவும், அடுத்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் வருகின்ற ஜனவரி மாதம் 3 மற்றும் 4ம் தேதி சிவகங்கையில் நடத்துவது எனவும், அதற்கு முன்னதாக  வருகின்ற டிசம்பர் மாதத்தில் இருந்தே 2026 ஆம் ஆண்டிற்கான உறுப்பினர்கள் புதுப்பிக்கும் பணியை அனைத்து மாவட்டத்திலும் துவங்குவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மக்கள் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் "பத்திரிகையாளர் குரல்" …சங்கத்தின் புதிய தீர்மானம்…

we-r-hiring

மேலும், மிக முக்கிய தீர்மானமாக  தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் 35 வது ஆண்டு விழாவை மிக விமர்சையாக கொண்டாடுவது என முடிவெடுக்கபட்டது. அதன்படி, அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் சென்னையில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்சங்கத்தின் மாநில மாநாடு நடத்துவது எனவும், அந்த நிகழ்வில், இந்திய துணை ஜனாதிபதி அவர்களும், தமிழக முதல்வர் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை கலந்து கொள்ள செய்து, மிக விமர்சியாக கொண்டாடுவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

அப்போது, மாநாட்டு மலர் வெளியிடுவது எனவும், அதில் வழக்கம் போல் வெளியிடப்படும் விளம்பரங்களை குறைத்து கொண்டு மிக முக்கிய விளம்பரங்கள் மட்டுமே வெளியிடப்படுவதுடன், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்  இருக்கக்கூடிய முக்கிய இடங்கள், பழமையான இடங்களின் வரலாறுகள், கோயில் வரலாறுகள், மற்றும் அரசியல் பிரமுகர்கள் அவர்கள் மூத்த அரசியல் தலைவர்களுடன் எடுத்துகொண்ட  புகைப்படங்கள் மற்றும் அவர்களுடைய நினைவு கூறும் நிகழ்வுகள், முக்கிய பிரமுகர்களின் கட்டுரைகள் போன்றவைகள் வெளிவரும் வகையில், வெளியிட  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் "பத்திரிகையாளர் குரல்" …சங்கத்தின் புதிய தீர்மானம்…

பத்திரிகையாளர் சங்கத்தின் 35 வது ஆண்டு விழா, துணை ஜனாதிபதி, முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பங்கேற்பில் விமர்சையாக நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2 நாள் சிபிஐ வேட்டை! எவிடன்சை வைத்து கதறிய புஸ்ஸி! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

MUST READ