spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநானும், காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாட்டோடு எப்போதும் இருப்போம் - ராகுல் காந்தி பேச்சு

நானும், காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாட்டோடு எப்போதும் இருப்போம் – ராகுல் காந்தி பேச்சு

-

- Advertisement -

மோடி மட்டுமல்ல உலகில் எவராலும் தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாட்டை தொட்டுக் கூட பார்க்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரசாரத்திற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்திற்கு வந்துள்ளார். அவர் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 8 மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: மீனவர்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களின் தொழிலை முன்னேற்ற தனி தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளோம். ஏற்கனவே சொன்னது போல, இது ஒரு தத்துவப் போர். நாட்டின் அரசியல் சாசனத்தை காக்கும் இந்தப் போரில் நாம் வெல்வோம் என்பதை உறுதியாகச் சொல்கிறேன்.

நானும் காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாட்டோடு எப்போதும் இருப்போம். மோடி மட்டுமல்ல உலகில் எவராலும் தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாட்டை தொட்டுக் கூட பார்க்க முடியாது. தமிழ்நாட்டு பெண்களும் சரி, இந்தியாவின் பெண்களும் சரி, தேசத்தின் எதிர்காலத்தை அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். ஏழைப் பெண்களுக்காக அருமையான திட்டத்தை காங்கிரஸ் ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. குடும்பத்தின் ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டுக்கும் ₹1 லட்சம் வழங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களே தங்களுடைய கல்வி முறை எப்படி இருக்க வேண்டும், தேர்வு முறை எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம். மாநில அரசுகள் விரும்பினால் நீட் தேர்வு தொடரும். இதில் மாநில அரசே முடிவு செய்யும்

 

MUST READ