மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கை முன்மொழியும் மும்மொழிக் கொள்கைக்கு மாநில அரசு எந்த வகையிலும் அடிபணியாது என்றும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையில் தவெக அரசு மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது என்று பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரவித்துள்ளாா்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்பிக்கும் தற்போதைய கொள்கையே பின்பற்றப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ‘பிஎம் ஸ்ரீ’ (PM SHRI) திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அண்மையில் மத்திய அரசு நினைவூட்டல் கடிதம் அனுப்பியிருந்த நிலையில், இவரின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் செவ்வாய்க்கிழமை அன்று கூறுகையில், தமிழகப் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கொண்ட தற்போதைய இருமொழிக் கொள்கையையே தவெக அரசு பின்பற்றும் என்றார்.
“எங்கள் அரசு மும்மொழிக் கொள்கையை அனுமதிக்காது. எந்தவொரு மறைமுக அழுத்தத்திற்கும் நாங்கள் பணிய மாட்டோம். இருமொழிக் கொள்கையில் தவெக எந்தவித சமரசமும் இன்றி தனதுபாட்டில் உறுதியாக இருக்கும்,” என்று அவர் ‘தி இந்து’ நாளிதழிடம் தெரிவித்தார். மத்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் தமிழ்நாட்டில் ‘பிரதான் மந்திரி ரைசிங் இந்தியா பள்ளிகள்’ (PM SHRI) திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்த நிலையில், அமைச்சர் ராஜ்மோகனின் இந்த கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.
ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களை நிறுவுவதற்கு நிலத்தைக் கண்டறியுமாறு 2025 டிசம்பரில் உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்த விஷயம் ஆலோசனையில் உள்ளதாகக் கூறினார். “இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். தகுந்த முடிவு எடுக்கப்படும்,” என்றார்.
மேலும், அரசுப் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு இடைவெளிகள் பொது-தனியார் பங்களிப்பு (PPP) மூலம் சரிசெய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.“தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குக் கல்வியே அடித்தள வலிமையாகும். தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது. இந்த இடைவெளியைக் களைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்றார்.
சோழர் கால செப்புப் பட்டயங்கள் குறித்து, ”சோழர் காலத்து ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களைத் தமிழ்நாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தொல்லியல் துறை அமைச்சருமான ராஜ்மோகன் கூறியதாவது. ”ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்கள் தமிழ்நாட்டின் சொத்து.” இந்தத் தொல்பொருட்களைத் தமிழ்நாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், பொதுமக்கள் பார்வைக்காகவும் கல்வி நோக்கங்களுக்காகவும் மாநிலத்தின் முக்கிய இடங்களுக்கு அவை கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த செப்புப் பட்டயங்களை மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழனின் தலைநகரான தஞ்சாவூரில் வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சில நாட்களுக்கு முன்பு வரை நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்தின் (Leiden University) வசம் இருந்த இந்த செப்புப் பட்டயங்கள், பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அந்நாட்டிற்குச் சென்றிருந்தபோது அவரிடம் ஒப்படைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் குறித்து, ”சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற முதல் இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சி அறிக்கைகளை வெளியிடுமாறு மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த ராஜ்மோகன், தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பேணிப் பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் தவெக அரசு எவ்வித முயற்சியையும் கைவிடாது” என்று கூறினார்.
வெறிநாய் மற்றும் ஆபத்தான நிலையிலுள்ள தெருநாய்களுக்குக் கருணைக்கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி”
