spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅவை நடவடிக்கை ஆவணங்கள் இப்பொழுது அனைத்து மொழிகளிலும் பெரு மகிழ்வு- சு.வெங்கடேசன்

அவை நடவடிக்கை ஆவணங்கள் இப்பொழுது அனைத்து மொழிகளிலும் பெரு மகிழ்வு- சு.வெங்கடேசன்

-

- Advertisement -

அவை நடவடிக்கை ஆவணங்கள் இப்பொழுது அனைத்து மொழிகளிலும் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.அவை நடவடிக்கை ஆவணங்கள் இப்பொழுது அனைத்து மொழிகளிலும் பெரு மகிழ்வு- சு.வெங்கடேசன்நாடாளுமன்ற அலுவல் பட்டியல் இன்று முதல் தமிழில் வெளியாகத் தொடங்கியது. தொடர் வலியுறுத்தல் காரணமாக மக்களவை அலுவல்கள் குறித்த நிகழ்ச்சி நிரல் பட்டியல் தமிழில் வெளியானது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்த நாடாளுமன்ற அலுவல் பட்டியல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதனை மேற்கோள்காட்டி மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்ற ஆட்சி மொழிக்குழு நாடு முழுவதும் இந்திமயமாக்க இடைவிடாது பணியாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் மொழி சமத்துவத்துக்காக போராடுபவர்கள் நாடாளுமன்றத்தை இந்திய மயமாக்க இடைவிடாது போராடி வருகிறோம். அதன் முதல் கட்டம் தாய் மொழிகளில் பேசும் உரிமை அடுத்த கட்டம் எந்த மொழியில் பேசினாலும் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கும் உரிமை. இப்பொழுது அவை நடவடிக்கை ஆவணங்கள் அனைத்து மொழிகளிலும் பெரு மகிழ்வு.” என்று வெளியிடப்பட்டுள்ளது.

முதல்வர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

we-r-hiring

MUST READ