spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஒன்றிய அரசு… சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

ஒன்றிய அரசு… சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

-

- Advertisement -

சிலிண்டர் விலையை உயர்த்தி அடித்தட்டு மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு . இந்த விலை உயர்வை வன்மையாகக் கண்டித்து திரும்பப் பெற வேண்டும் என தனது வலைதள பக்கத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா். ஒன்றிய அரசு… சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்மேலும் தனது பதிவில் கூறியிருப்பதாவது, ”மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டு முதல், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் 410 ரூபாயில் இருந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே போய் தற்போது ரூ 820 என்ற அளவில் உயர்ந்துள்ளது. தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய தேவையான காஸ் சிலிண்டர் விலையை இன்று ரூபாய் 50 என்ற அளவில் உயர்த்தி அடித்தட்டு மக்களில் தலையில் இடியை இறக்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு.

மேலும், வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் துயரத்தை கண்டுகொள்வதே இல்லை. நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் சூழலில், காஸ் சிலிண்டர் விலையையும் ஒன்றிய  பாஜக அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் ”என கூறியுள்ளாா்.

அரசு விழாவில் பங்கேற்று தமிழகத்துக்கான கோரிக்கையை முதலமைச்சர் வைத்திருக்கலாம் – தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து

we-r-hiring

MUST READ