Homeசெய்திகள்போர்கால ஒத்திகை -மாநில அரசுகளுக்கு உத்தரவு!

போர்கால ஒத்திகை -மாநில அரசுகளுக்கு உத்தரவு!

-

- Advertisement -

பஹல்கம் தாக்குதலை தொடர்ந்து, நாளை போர்கால ஒத்திகையை நடத்த படுகிறது. பாகிஸ்தானை ஒட்டிய எல்லையோர இந்திய மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த உத்தரவிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.போர்கால ஒத்திகை -மாநில அரசுகளுக்கு உத்தரவு!

நாளை நாடு முழுவதும் 250-க்கு மேற்பட்ட இடங்களில் போர் ஒத்திகை நடைபெற உள்ள நிலையில் போர் ஒத்திகைக்காக 3 பிரிவுகளாக மாவட்டங்களை பிரித்துள்ளது மத்திய அரசு. முதல் பிரிவில் சென்னை, கல்பாக்கம், டெல்லி, மும்பை, சூரத், வதோதரா, உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளன.  தமிழகத்தை பொறுத்தவரை கல்பாக்கம் அணுமின் நிலையம், ஆவடி ராணுவ தளவாட தொழிற்சாலை, மணலி பெட்ரோலிய தொழிற்சாலைகளில் போர் ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

2 வது பிரிவில் ஹைதராபாத், விசாகப்பட்டினம், கொச்சி உள்ளிட்ட 201 மாவட்டங்கள் உள்ளன. 3-வது பிரிவில் 45 மாவட்டங்கள் உள்ளன. பாக்கிஸ்தான் எல்லையை பகிரும் மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான் , குஜராத், லடாக், ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த சிறப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வான்வழி தாக்குதல் ஒத்திகையின் போது எச்சரிக்கை ஒலியை ஒலிக்கவிட்டு சோதனை நடத்த உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் , இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில், போர் பதற்ற சூழலில் அவசரகால வெளியேற்றதிற்கான ஒத்திகையும், எதிரிகள் தாக்கும் போது பாதுகாப்பாக இருப்பது எப்படி என மக்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது பற்றியும், ஒத்திகை வழங்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேகமாக வளரும் நாடாக மாறி இங்கிலாந்து, பிரான்சை முந்திச் சென்ற இந்தியா…

MUST READ