spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

-

- Advertisement -

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் இன்று 6.9 மற்றும் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷூவின் கிழக்கு கடற்கரையில் சுமார் 30 கிலோமீட்டர் ஆழத்தில் முதல் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது  நிலநடுக்கம் மியாசாகிக்கு வடகிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒலிம்பிக் மல்யுத்தம் – இந்திய வீரர் அமன் ஷெராவத் காலிறுதிக்கு தகுதி

இந்நிலையில், கியூஷு மற்றும் ஷிகோகு ஆகிய மேற்கு தீவுகளின் பசிபிக் கடற்கரையில் கடல் மட்டம் ஒரு மீட்டர் உயரும்  எனவும் சுனாமி அபாயம் இருப்பதாக ஜப்பான் அதிகாரிகள் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ