spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்எம்.எல்.ஏவாக பதவியேற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

எம்.எல்.ஏவாக பதவியேற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

-

- Advertisement -

எம்.எல்.ஏவாக பதவியேற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ,வாக பதவியேற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

Image

தலைமைச்செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, துரை வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.

we-r-hiring

evks 3

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு , தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் , சுயேச்சை கட்சி வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 பேர் போட்டியிட்டனர்.

evks 2

மொத்தமுள்ள 2 லட்சத்தை 27 ஆயிரத்து 547 வாக்காளர்களில், 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்துள்ளனர். இதுதவிர 398 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. 15 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஏற்கனவே, கடந்த 1984-ம் ஆண்டு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். தற்போது, 38 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைகிறார் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ