பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேரின் விவரங்கள் வெளியாகும்போது, அதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது வெளிவரும் என்றும், செத்தவர்கள் உயிர் பிழைத்துவிடுவார்கள் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட வழக்கில் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும், தேர்தல் ஆணையம் – பாஜகவுக்கு எதிராக ராகுல்காந்தி முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- வாக்கு திருட்டு விவகாரம் காரணமாக தேர்தல் ஆணையம் நெருக்கடியில் இருக்கிறது. ராகுல்காந்தி இந்த விவகாரத்தை கையாண்ட விதம், சம கால அரசியலில் அவ்வளவு விவரமாக யாரும் கையாண்டது கிடையாது. நாடு முழுவதும் பொதுப்படையாக குற்றச்சாட்டு வைத்தாலும், ஒரு குறிப்பிட்ட தொகுதியை மட்டும் ஆய்வுக்கு, அந்த தொகுதியில் உள்ள முறைகேடுகளை மட்டும், கள புலனாய்வு செய்து அதை வெளிப்படுத்தினார். அதை யாராலும் மறுக்க முடியவில்லை. இதனை தரவுகள் குளறுபடி, மனித தவறு என்று மறுக்க முடியாது.

இந்திய குடிமக்கள் அனைவருக்கு இரண்டு உரிமைகள் உள்ளன. ஒன்று வாக்காளராக இருப்பது. மற்றொன்று வாக்களிப்பது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு ஏது வாக்கு. அவர்கள் எல்லாம் சட்டவிரோத குடியேறிகள். அதன் காரணமாகவே அவர்கள் குறித்த தரவுகள் இல்லை என்று தேர்தல் ஆணையமே மறைமுகமாக சொல்கிறது. பிரதமர் மோடியின் உரையில் இந்துக்களை சிறுபான்மையினராக மாற்ற பார்க்கிறார்கள் என்று சொன்னார். தேர்தல் ஆணையம் அதற்கு துணை புரிகிறது. பீகார் என்கிற ஒரே மாநிலத்தில் இத்தனை லட்சம் பேரை நீக்கிவிட்டோம். இதில் அன்டிரேசபிள் எல்லாம் வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்கள் என்று சொல்கிறது. அதனை பாஜக ஆம் என்று சொல்கிறது.
மகாராஷ்டிராவில் வேலைபார்த்த வங்கமொழி பேசுகிற புலம்பெயர் தொழிலாளர்களை எல்லாம் கைது செய்தார்கள். அவர்களிடம் ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்கள் உள்ளபோது அதை ஏற்க மாட்டார்கள். அவர்களை எல்லாம் பிடித்து வங்கதேசத்திற்குள் தள்ளிவிட்டார்கள். இது தொடர்பான வீடியோ பதிவுகள் எல்லாம் வெளியாகின. இதற்கு பிறகுதான் SIR நடைமுறையே வந்தது. அதற்கு பிறகு வங்கதேசத்தினர் ஊடுருவி உள்ளனர். அவர்களி வாக்குகளை வைத்துதான் மம்தா பானர்ஜி வெற்றிபெற்றார். அவர்களின் வாக்குகளை வைத்துக்கொண்டு பீகாரிலும் காங்கிரஸ் வெற்றி பெற முயற்சிக்கிறது. எனவே நாங்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ள போகிறோம். வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்துவது எங்களுடைய வேலை. அதற்கு சட்டம் அனுமதி வழங்கியுள்ளது என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது. 2025 ஜனவரியில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. அந்த பட்டியலும் சரியில்லை என்று 6 மாதங்களில் அதில் சிறப்பு திருத்தம் மேற்கொண்டு 65 லட்சம் வாக்காளர்களை நீக்கிவிட்டனர்.
கிராமங்களில் யாரும் இறக்கவில்லை என்று மக்கள் பதறி அடித்துக்கொண்டு சொல்கிற போது, நீங்கள் உயிருடன் இருப்பதை நிரூபியுங்கள் என்கிறார்கள். அதற்கு ஆதார், ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களை செல்லாது என்கிறார்கள். அவர்களின் அப்பா – அம்மா பிறப்பு சான்றிதழ் வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏழை மாநிலமாகிய பீகாரில் உள்ள மக்கள், அவர்கள் திண்டாடி தெருவில் நிற்கின்றனர். அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டார்கள். இப்படிதான் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.
இதனை அடுத்து, தான் ராகுல்காந்தி செத்துப் போனவர்களுடன் நான் டீ குடித்தேன் என்று வீடியோ பதிவு போட்டார். அது வைரலகியது. அப்போது இது தரவுகளில் உள்ள பிரச்சினை என்று சொன்னார்கள். அதை மக்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். தேர்தல் ஆணையம் பிடிஎப் போட்டோ பிரிண்ட் ஆக போட்டுள்ளது. சர்ச்சபிள் ஃபார்மேட்டில் வழங்கினால் எபிக் நெம்பரை போட்டு கண்டுபிடித்துவிடலாம் என்றால், வாக்காளர் அட்டையே செல்லாது என்று சொல்கிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை போலியானது என்றால் அதை தயாரித்து கொடுத்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். நீதிமன்றத்தில் முதலில் வழக்கு நடைபெற்றபோது தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவாக உத்தரவு வரும் என்று எதிர்பார்த்தேன்.
ராகுல்காந்தி எடுத்த நடவடிக்கை காரணமாக நீதிமன்றம் இரண்டு சலுகைகளை கொடுத்திருக்கிறது. ஒன்று வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் ஆகிய ஆவணங்கள் போதும் என்று சொல்லியுள்ளது. மற்றொன்று வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை சொல்லுமாறு தெரிவித்துள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்களை கண்டுபிடிக்கும் வழிகள் குறித்து 2 வருடங்களுக்கு முன்பே பிரதமர் மோடியிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. ஆனால் அந்த வாக்காளர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லி பல லட்சம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கிவிட்டோம். தற்போது பீகார் வாக்காளர் நீக்கம் தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணையை பார்க்க வேண்டியுள்ளது.
வெளி மாநில வாக்காளர்கள், தமிழ்நாட்டில் குவிந்திருக்கும் விவகாரம் தற்போது எழுந்துள்ளது. பீகாரை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் வேலை செய்கிறபோது உனக்கு பீகாரில் வாக்கு இல்லை. நீ தமிழ்நாட்டிலேயே வாக்களி என்று சொன்னால், அவனுடைய வாழ்க்கை இருக்குமிடத்தில் தானே வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் குடியேறியவர்கள், அந்த மாநில அரசியலில் பங்கெடுக்கலாம் என்று கொண்டுவந்தால், உலகநாடுகளில் உள்ள பெரும் பிரச்சினையை இந்தியா கொண்டு வருகிறீர்கள். இங்கிலாந்தில் அங்கு குடியேறிய இந்தியர்கள் வாக்களிப்பதுதான் பிரச்சினையாக உள்ளது. இங்கிலாந்து அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், குடியேறியவர்களுக்கு வாக்களிப்பதை எதிர்க்கும் விதமாக தான் உள்ளது. மேலை நாடுகளில் வெளிநாட்டினர் குடியேற்றங்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு அடிப்படையே இதுதான். தற்போது அதை நோக்கி நாமும் செல்கிறோம். இது ஆபத்தான போக்கு ஆகும்.
இதை தடுக்கும் கடமை மத்திய அரசிடமும், தேர்தல் ஆணையத்திடமும்தான் உள்ளது. அந்த இடம் அரசியல் காரணங்களுக்காக பாழ்பட்டுவிட்டது என்றுதான் நினைக்கிறேன். அதனால்தான் நயினார் நாகேந்திரன் விவரம் இல்லாமல் இதை சொல்கிறார். ராகுல்காந்தி மிகவும் முக்கியமான புள்ளியை தொட்டிருக்கிறார். பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விதித்த 3 நாள் கெடு முடியபோகிறது. தற்போது தேர்தல் ஆணையம் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும். அப்படி வெளியாகும் இறந்தவர்கள் பட்டியலில் ஏராளமான குளறுபடிகள் இருக்கும். 8 கோடி மக்களுக்கு எப்படி ஒரு மாதத்திற்குள் வாக்காளர் பட்டியலை சரிபார்க்க முடியும்? இது நடைமுறையில் சாத்தியமற்ற இலக்கு ஆகும். அதனால் இறந்துபோனவர்கள் எல்லாம் உயிரோடு வந்துவிடுவார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.