கரூா் சம்பவம் தொடர்பாக இன்று நடிகை அம்பிகா தனது ஆறுதலை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் மக்கள் சந்திப்பின்போது, விஜய் பேசி முடித்து புறப்பட்டபின், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள், முதியவா் என 41 நபா்கள் உயிரிழந்தனா். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும், இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகர்கள் கருத்துகள் தெரிவித்து வந்தனா். கருத்துகள் மட்டும் தெரிவித்ததோடு, அல்லாமல் சம்பவ இடத்திற்கு சென்று கட்சித் தலைவா்கள், நடிகா்கள் ஆறுதல் கூறி வருகின்றனா். அந்த வகையில் இன்று கரூா் சம்பவம் தொடர்பாக இன்று நடிகை அம்பிகா சம்பவ இடத்தை பார்வையிட்டாா். அதன் தொடர்ச்சியாக வேலுச்சாமிபுரம் பகுதியில் உள்ள உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து தனது ஆறுதலை தெரிவித்தார்.
திருமாவளவன் மீது தாக்குதல் நடத்த முயற்சி? விசிகவினர் சாலை மறியல் – போலீசார் விசாரணை
