கரூரில் நடைபெற்ற சம்பவம் துரதிஷ்டவசமானவை இது வெறும் விபத்து மட்டுமே இதற்கு சிபிஐ விசாரணை தேவையில்லை தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள புதிய நிதியில் கட்சித் தலைவர் ஆரணியில் ஏசி சண்முகம் பேட்டியளித்துள்ளாா்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட புதிய நீதி கட்சி தலைவர் ஏ சி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கரூரில் தவெக பொதுக்கூட்டத்தில் 41 நபர்கள் இறந்ததற்கு பத்தாயிரம் பேர் கூட வேண்டிய இடத்தில் 30,000 பேர் கூடியதால் அசம்பாவிதம் நடந்தது. இதற்கு விஜயின் காலதாமதமும் ஒரு காரணமாகும் மற்றும் 6 மணி நேரம் தண்ணீர் கூட இல்லாமல் கூட்டத்திற்கு வந்தவா்கள் தவித்துக் கொண்டிருந்தனர். இந்த காலதாமதம் ஆன பின் விஜயின் வாகனம் உள்ளே வந்ததால் நெரிசலில் சிக்கி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு விஜயும் காரணமல்ல காவல் துறையும் காரணம் இல்லை இது ஒரு விபத்து என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இது ஒரு துரதிஸ்ட வசமான சம்பவம் இதுபோன்று நிகழக் கூடாது இறந்த குடும்பங்களுக்கு புதியநீதி கட்சி சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். இனி வரும் காலங்களில் சாலையிலே மக்களை சந்திக்காமல் ஒரு மைதானத்திலே பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றார். இந்த வழக்கு சிபிஐ விசாரணை கோருவதற்கு ஒரு அர்த்தமே இல்லை இதனை யாரும் திட்டமிட்டு செய்யவில்லை இதுதான் என்னுடைய கருத்து 10,000 நிற்கும் இடத்தில் வாகனம் உள்ளே வந்ததால் ஒருவர் மீது ஒருவர் தள்ளப்பட்டு இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த செயல் தற்செயலாக நடைபெற்ற செயல் என்று புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் செய்தார்களிடம் தெரிவித்தார்.
அடுத்த கட்சி கொடியை காட்டும் அளவு அதிமுக தரம் தாழ்ந்து விடவில்லை – செல்லூர் ராஜு ஆவேசம்
