முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளை உணவு உணவு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.
சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், தூய்மைப் பணியாளர்கள் அதிகாலையே தங்கள் பணியைத் தொடங்க வேண்டிய சூழலில், பணிபுரியும் இடத்திற்கே உணவை எடுத்து வந்து சாப்பிடுவதில் பல்வேறு நடைமுறைப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கும் திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது.
காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.186.94 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தனியாா் நிறுவனமானது, ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டது. காலை உணவில் இட்லி, மதியம் ரசம், சாம்பார், கூட்டு, இரவு சப்பாத்தி அல்லது ரொட்டி உள்ளிட்டவைகள் இதில் அடங்கும். இந்த உணவுகள், ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருக்கும். இந்நிலையில் சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தினை 15-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
டெல்லி கார் வெடிப்பு! யார் டார்கெட் தெரியுமா? பெரிய சதித்திட்டம் இருக்கு? பொன்ராஜ் நேர்காணல்!



