Homeசெய்திகள்தேர்தல் 2026நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்கள் - 85 சதவீதத்தை கடந்தால் எந்த கட்சிக்கு ஆபத்து

நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்கள் – 85 சதவீதத்தை கடந்தால் எந்த கட்சிக்கு ஆபத்து

-

- Advertisement -

தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட நான்கு அணிகளாக போட்டிடுகின்றனர். நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்கள் - 85 சதவீதத்தை கடந்தால் எந்த கட்சிக்கு ஆபத்துதமிழகத்தில் 5 கோடியே 73 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதில் 2.93 கோடி பெண் வாக்காளர்களும், 2.83 கோடி ஆண் வாக்காளர்கள் மற்றும் 7,728 மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்களிக்க உள்ளனர். தமிழக வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கடந்த மூன்று நாட்களாக பேருந்து மூலம் சென்று கொண்டிருக்கிறார்கள். இன்னும் பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் ஆர்வமுடன்  ஏராளமானோர் வந்திருக்கிறார்கள். இது எப்போதும் இல்லாத புது தேர்தலாக தெரிகிறது. வாக்களித்து வரும் மக்களின் ஆர்வத்தை கூர்ந்து கவனிக்கும் போது வாக்கு பதிவு 85 சதவீதத்தை தாண்டும் என்று தோன்றுகிறது.

எப்போதும் இல்லாத அளவிற்கு புதிய வாக்காளர்கள், இளைஞர்கள், பெண்கள் கடும் வெயிலை கூட பொருட்படுத்தாமல் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு 85 சதவீதத்தை கடந்தால் ஆட்சியாளர்கள் மீது உள்ள எதிர்ப்பு வாக்குகள் இந்த முறை அதிமுக கூட்டணி பக்கம் திரும்புவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. இளைஞர்கள், கணிசமான பெண்கள், ஆட்சியின் மீது உள்ள எதிர்ப்பு வாக்குகள் விஜய் பக்கமே திரும்புகிறது.

we-r-hiring

நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்கள் - 85 சதவீதத்தை கடந்தால் எந்த கட்சிக்கு ஆபத்து

திமுகவின் நிரந்தர வாக்கு வங்கியும், ஸ்டாலின் ஆட்சியில் செய்த ஒரு சில திட்டங்களில் பயணடைந்தவர்களும், ஒரு பகுதி சிறுபான்மையினரும் திமுகவிற்கு வாக்களித்து வருகிறார்கள். திமுகவிற்கு கணிசமாக பாதிப்பு ஏற்பட்டாலும் பெரிய அளவில் சேதாரம் இருப்பதாக தெரியவில்லை.  ஆனால் விஜய்க்கு விழுகின்ற வாக்குகளால் அதிமுகவிற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இன்று மாலை எவ்வளவு வாக்குகள் பதிவாகிறது என்பதை வைத்து ஓரளவு தான் கணிக்க முடியும். மே – 4 தேதி முழுமையாக தெரிந்து விடும்.

2026 தேர்தல் – காலை 11 மணி வரை 37.56% வாக்குப்பதிவு…

MUST READ