Homeசெய்திகள்மாவட்டம்+2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடம் – பட்டாசு வெடித்து கொண்டாடிய கல்வித்துறை

+2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடம் – பட்டாசு வெடித்து கொண்டாடிய கல்வித்துறை

-

- Advertisement -

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கல்வித்துறை அதிகாரிகள் கொண்டாடினர்.+2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடம் – பட்டாசு வெடித்து கொண்டாடிய கல்வித்துறை

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், மாநில அளவில் 98.87 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியை முன்னிட்டு ஈரோட்டில் கல்வித்துறை அதிகாரிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

we-r-hiring

தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஈரோடு மாவட்டம் மாநில அளவில் அதிக தேர்ச்சி விகிதத்தை பெற்று கல்வித்துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையடுத்து ஈரோட்டில் மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தில் கொண்டாட்டம் நடைபெற்றது. அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் பட்டாசுகள் வெடித்து வெற்றியை கொண்டாடினர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இ.மான்விழி, இந்த வெற்றி திட்டமிட்ட கல்விசார் நடவடிக்கைகளின் பலன் என தெரிவித்தார். குறிப்பாக படிப்பில் பின்தங்கிய மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் மற்றும் தொடர்ந்து கண்காணிப்பு வழங்கப்பட்டதாலேயே இந்த சாதனை சாத்தியமானது என்று கூறினார்.

மேலும், தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் 100 சதவீதம் உயர்கல்வியில் சேரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கல்வியில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் மாவட்டமாக ஈரோடு திகழ வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதாகவும் அவர் பாராட்டினார்.

+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு –  95.20% தேர்ச்சியுடன் மாணவர்கள் சாதனை

MUST READ