Homeசெய்திகள்தமிழ்நாடுபெரியாரின் கொள்கைகளுக்கு மூடுவிழா? தவெக அரசின் 'சாதி அடையாள அட்டை' திட்டமும், வெளுத்த முதல்வர் விஜய்யின்...

பெரியாரின் கொள்கைகளுக்கு மூடுவிழா? தவெக அரசின் ‘சாதி அடையாள அட்டை’ திட்டமும், வெளுத்த முதல்வர் விஜய்யின் சாயமும்!

-

- Advertisement -

​”சாதி, மதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதே எங்களின் இலக்கு; எங்களின் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார்” என்று மேடைகளில் முழங்கி, தமிழக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது தமிழக வெற்றிக் கழகம் (தவெக). ஆனால், ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பெரியாரின் அடிப்படை கொள்கைகளுக்கே முற்றிலும் முரணான ஒரு திட்டத்தை முதல்வர் விஜய் தலைமையிலான அரசு கையில் எடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெரியாரின் கொள்கைகளுக்கு மூடுவிழா? தவெக அரசின் 'சாதி அடையாள அட்டை' திட்டமும், வெளுத்த முதல்வர் விஜய்யின் சாயமும்!

​பெரியார் வழியா? சாதி வழியா?
பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ் விவரங்கள் உள்ளிட்ட சாதி அடையாளங்கள் இணைக்கப்படும் என்று தவெக அரசின் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்திருப்பது, முதல்வர் விஜய்யின் கொள்கை முகமூடியைக் கிழித்து, அவரின் உண்மையான சாயத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது என எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

we-r-hiring

​பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கும் தவெக அரசு
​தமிழகத்தில் பல தசாப்தங்களாகப் போராடி, பெயருக்குப் பின்னால் இருக்கும் சாதி வால்களை வெட்டி எறிந்த பெருமை திராவிட இயக்கங்களுக்கும் தந்தை பெரியாருக்கும் உண்டு. ஆனால், இன்று தவெக அரசோ, பள்ளிக் கூடங்களிலிருந்தே சாதிப் பிரிவினையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கத் திட்டமிடுகிறது.

​வெளுத்த விஜய் சாயம்
தேர்தலுக்கு முன்பு “சமூக நீதி”, “சமத்துவம்” எனப் பேசிவிட்டு, தற்போது மாணவர்களின் அடையாள அட்டையிலேயே சாதியைப் புகுத்த நினைப்பது முதல்வர் விஜய்யின் சந்தர்ப்பவாத அரசியலையே காட்டுகிறது.

​பிளவுபடும் வகுப்பறைகள்
இன்னும் உலகத்தைப் புரிந்து கொள்ளாத பிஞ்சு குழந்தைகளின் கழுத்தில் தொங்கும் அடையாள அட்டையில் சாதி விவரங்கள் இடம்பெற்றால், அது மாணவர்களிடையே “நீ உயர்ந்தவன், நான் தாழ்ந்தவன்” என்ற பாகுபாட்டை விதைக்கும்.

​தமிழகத்தின் கல்விச் சாதனைக்கு நேரும் ஆபத்து
​இந்தியாவிலேயே பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் (Drop-out) மிகக் குறைவாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். சாதி, மத பேதமின்றி அனைத்துக் குழந்தைகளும் ஒன்றாக அமர்ந்து படிக்கும் சமத்துவச் சூழலே இந்த வரலாற்றுச் சாதனைக்குக் காரணம்.

சமூக ஆர்வலர்களின் எச்சரிக்கை
பள்ளிகளில் சாதி அடையாளம் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தால், ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி வளாகங்களுக்குள்ளேயே ஒருவித தாழ்வு மனப்பான்மைக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாக நேரிடும். இது மாணவர்களிடையே சாதி மோதல்களுக்கு வழிவகுப்பதோடு, விளிம்புநிலை குழந்தைகள் கல்வியைப் பாதியிலேயே கைவிட்டு வெளியேறும் (Drop-out) அபாயத்தையும் பலமடங்கு அதிகரிக்கும்.

​​அரசியல் லாபத்திற்காகவும், நிர்வாக வசதி என்ற போர்வையிலும் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை தவெக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவர் என்று சொல்வது வெறும் ஓட்டு அரசியல் நாடகம் இல்லை என்றால், முதல்வர் விஜய் இந்த ஆபத்தான திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கையாகும்.

மாணவர்களிடையே பிரிவினையை தூண்டும் சாதி அடையாள அட்டை – அமைச்சர் செங்கோட்டையனின் அறிவிப்புக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!

MUST READ