Homeசெய்திகள்மாவட்டம்புகலூர் நகராட்சி ஆணையரை மாற்றக் கோரி உள்ளிருப்புப் போராட்டம்! தலைவர் குணசேகரன் தலைமையில் அனைத்துக் கட்சி...

புகலூர் நகராட்சி ஆணையரை மாற்றக் கோரி உள்ளிருப்புப் போராட்டம்! தலைவர் குணசேகரன் தலைமையில் அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் அதிரடி!

-

- Advertisement -

கரூர் மாவட்டம் புகலூர் நகராட்சி ஆணையர் வெங்கடாசலம் மற்றும் மேலாளரைப் பணியிட மாற்றம் செய்யக் கோரி, நகராட்சித் தலைவர் குணசேகரன் தலைமையில் அனைத்துக் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.புகலூர் நகராட்சி ஆணையரை மாற்றக் கோரி உள்ளிருப்புப் போராட்டம்! தலைவர் குணசேகரன் தலைமையில் அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் அதிரடி!

பொதுமக்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வது, சொத்து வரி விதிப்பில் அதிகப்படியான வரி விதிப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை நகராட்சி ஆணையர் மீது மாமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர்.

we-r-hiring

மேலும், வீட்டுமனை பட்டா விவகாரத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையின்படி நடவடிக்கை எடுக்காமல் மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

தூய்மைப் பணியாளர்களை மரியாதைக் குறைவாக நடத்துவது, நகராட்சி ஊழியர்களை அதிகாரிகளின் சொந்தப் பணிகளுக்குப் பயன்படுத்துவது, அனிமேட்டர் பணியிட நியமனம் தொடர்பான முறைகேடுகள் குறித்த கேள்விகள் எனப் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் மாமன்றக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஆணையர் மற்றும் மேலாளரை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி நகராட்சித் தலைவர் குணசேகரன் தலைமையில் உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த சுமார் 22 மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

நகராட்சி நிர்வாகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அனைத்துக் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நடத்தி வரும் இந்தப் போராட்டத்தால் புகலூர் நகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூரில் கோர விபத்து: நகராட்சி கழிவுநீர் வாகனம் மோதி 80 வயது முதியவர் உயிரிழப்பு – கணவர் இறந்தது தெரியாமல் எழுப்ப முயன்ற மனைவி; கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!

MUST READ