தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக, “12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகின்றன. தோ்வு முடிவு எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும்” குறிப்பிட்டுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், “தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளைக் காலம் வழங்கத் தான் போகிறது. இது உங்கள் வாழ்வின் தொடக்கம் மட்டுமே. இனி தான் உங்களின் சிறப்பான phase அமையவுள்ளது என்ற positive outlook உடன் இந்தத் தேர்வு முடிவுகளை அணுகுங்கள். பெற்றோர்களும் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்களது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு ஒரு நல்ல நண்பனாகத் துணைநில்லுங்கள்! என்றும் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, https://results.digilocker.gov.in/ஆகிய இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம் என்றும் கூறியுள்ளாா்”.
கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது – அன்பில் மகேஷ்