spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை… ஓரே தெருவை சோ்ந்த பெண் கைது…

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை… ஓரே தெருவை சோ்ந்த பெண் கைது…

-

- Advertisement -

வாணியம்பாடி அருகே பின்பக்க வழியாக வீட்டிற்குள் சென்று வீட்டின் அறை பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகை மற்றும் 14 ஆயிரம் ரொக்கம் கொள்ளை அடித்து வழக்கில் பெண் கைது.வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை… ஓரே தெருவை சோ்ந்த பெண் கைது…திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் முனுசாமி. இவர் டைலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16 ஆம் தேதி காலை 11 மணி அளவில் இவர் மற்றும் இவரது மகள் சுகந்தி புத்துக்கோயில் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றுள்ளனர். பின்னர் இவரது மனைவி ராஜேஸ்வரி வீட்டை பூட்டி விட்டு பசு மாட்டை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

கோயிலுக்கு சென்று இருந்த முனுசாமி மற்றும் அவரது மகள் சுகந்தி பிற்பகல் வீட்டிற்க்கு வந்து பார்த்த போது வீட்டின் உள்புற தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. பின்னர் பின்பக்க வழியாக உள்ளே சென்று பார்த்த போது அறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்த நிலையில் பொருட்கள் சிதறி கிடைந்து இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பின்பக்க வழியாக வீட்டிற்குள் வந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகள் மற்றும் 14 ஆயிரம் ரொக்கம் கொள்ளை அடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.

we-r-hiring

சம்பவம் குறித்து முனுசாமி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து ரேகை பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்த நிலையில், முனுசாமியின் பக்கத்து வீட்டில்  வசிக்கும் கீதா என்ற பெண் முனுசாமி குடும்பத்தினருடன் வெளியே சென்றிருப்பதை அறிந்து, அவரது வீட்டின் பின்பக்க கதவை இரும்பு கம்பியால் உடைத்து உள்ளே சென்று  20 சவரன் தங்கநகை மற்றும் 14 ரூபாய் பணத்தை கொள்ளையடித்ததும், கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகையை வாணியம்பாடியில் உள்ள அடகுகடையில் அடகு வைத்து பணம் பெற்றதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

21 ஆண்டுகளாக போலீசுக்கு ‘டிமிக்கி’ கொடுத்த கொள்ளையன் கைது…

MUST READ