spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதேர்தலுக்கு முன்பே முடிவாகும் தேர்தல்: பாஜகவின் புதிய இரகசிய ஆயுதம் SIR!

தேர்தலுக்கு முன்பே முடிவாகும் தேர்தல்: பாஜகவின் புதிய இரகசிய ஆயுதம் SIR!

-

- Advertisement -

எம்.எம்.அப்துல்லா

இந்திய ஜனநாயகம் அதன் வரலாற்றிலேயே மிக இக்கட்டான ஒரு காலகட்டத்தை இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறது. பீகாரில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக, தேர்தல் ஆணையம் நடத்தும் ‘சிறப்புத் தீவிரத் திருத்தம்‘ (Special Intensive Revision – SIR) மூலம் லட்சக்கணக்கான தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன.தேர்தலுக்கு முன்பே முடிவாகும் தேர்தல்: பாஜகவின் புதிய இரகசிய ஆயுதம் SIR!

இது ஏதோ நிர்வாகக் குளறுபடி அல்ல. மாறாக இந்திய ஜனநாயகத்தின் ஆணி வேரையே அசைத்துப் பார்க்கும் ஒரு மாபெரும் சதித்திட்டம் என்பதை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி  அவர்கள் சமீபத்தில் அம்பலப்படுத்தி உள்ளார். “தேர்தல்கள், பாஜகவை ஆட்சிக்கு எதிரான மக்கள் மனநிலையில் இருந்து காப்பாற்றுவதற்காக, திட்டமிட்டு வடிவமைக்கப்படுகின்றன. சட்ட விரோதமாக வாக்காளர்களைச் சேர்ப்பது, நீக்குவதன் மூலம் தான் பாஜக தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறது” என்று அவர் ஆதாரத்துடன் கூறிய குற்றச்சாட்டு, இந்த SIR முறைகேடுகளுடன் முழுமையாகப் பொருந்துகிறது.

we-r-hiring

EVM முறைகேடு VS SIR: எது அபாயகரமானது?
தேர்தல் முறைகேடு என்றவுடன் நம் நினைவுக்கு வருவது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) செய்யப்படும் தில்லு முல்லுகள்தான். ஆனால், அது பகிரங்கமாகச் செய்யப்படும் ஒரு வங்கிக் கொள்ளையைப் போன்றது. பிடிபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் இந்த SIR முறைகேடு என்பது ஒரு நிகழ்ச்சிக்கு முன்பாக, விருந்தினர் பட்டியலையே நமக்குச் சாதகமாகத் திருத்தி எழுதுவதைப் போன்றது. இது மிக ரகசியமானது. சட்டபூர்வமான ஒரு நிர்வாகப் பணி போல தோற்றமளிக்கும், பிடிபடுவது மிகக் கடினம்.தேர்தலுக்கு முன்பே முடிவாகும் தேர்தல்: பாஜகவின் புதிய இரகசிய ஆயுதம் SIR!

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (SIR) என்பது, இறந்தவர்கள், போலி வாக்காளர்கள், இடம் மாறியவர்கள் ஆகியோரின் பெயர்களை நீக்கி, புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான ஒரு வழக்கமான நடவடிக்கைதான். ஆனால், பாஜக அரசின் கைகளில் இது ஒரு ‘ரகசிய ஆயுதமாக’ மாற்றப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் செல்வாக்குள்ள பகுதிகளில், ஆவணச் சரிபார்ப்பைக் கடுமையாக்குவது. ஆளுங்கட்சிக்கு சாதகமான பகுதிகளில் விதிகளைத் தளர்த்துவது, எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் பெயர் நீக்கத்தை வேகப்படுத்துவது. ஆளுங்கட்சி ஆதரவாளர்களின் பெயர் சேர்ப்பை விரைவுபடுத்துவது என பல வழிகளில் இந்த முறைகேடு அரங்கேற்றப்படுகிறது.

இப்படி நீக்கப்பட்ட வாக்காளர்களுக்கு அவர்கள் பெயர் நீக்கப்பட்டது தெரிய வருவதே கடினம். ஒருவேளை தெரிந்தாலும் மீண்டும் உரிய காலத்தில் விண்ணப்பித்து, பெயரைச் சேர்ப்பது சாத்தியமற்றது. இது ஒரு கண்ணுக்குத் தெரியாத நிரந்தரமான வாக்குரிமை பறிப்பு.

சிறிய மாற்றம் பெரிய வெற்றி: SIR எப்படி வேலை செய்கிறது?
இந்தியா பின்பற்றுவது ‘First-past-The-post’ (FPTP) தேர்தல் முறையாகும். இதில் ஒரு தொகுதியில் அதிக வாக்குகள் பெரும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இங்கே வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது மிகச்சிறிய வாக்கு வித்தியாசம் தான்.தேர்தலுக்கு முன்பே முடிவாகும் தேர்தல்: பாஜகவின் புதிய இரகசிய ஆயுதம் SIR!2019 மக்களவைத் தேர்தலை எடுத்துக் கொண்டால் மொத்தமுள்ள 543 தொகுதிகளில், 174 தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் 5%க்கும் குறைவு. 47 தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் ஒரு சதவீதத்துக்கும் கீழிருந்தது. இதன் அர்த்தம் என்ன? சில ஆயிரம் வாக்குகளை, சில இடங்களில் சில நூறு வாக்குகளை திட்டமிட்டு நீக்கினாலோ அல்லது சேர்த்தாலோ, ஒரு தொகுதியின் முடிவையே மாற்றிவிட முடியும்.

இதை ஒரு சிறிய உதாரணத்துடன் புரிந்து கொள்வோம். ஒரு தொகுதியில் ‘A’ மற்றும் ‘B’ என்ற இரண்டு கிராமங்கள் உள்ளன. இரண்டிலும் தலா 15000 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ‘A’ கிராமம் ஆளுங்கட்சிக்கும், ‘B’ கிராமம் எதிர்க்கட்சியின் செல்வாக்கான பகுதி, கடந்த தேர்தலில் ஆளுங்கட்சி வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது.

இப்போது SIR முறைகேடு மூலம் என்ன செய்யப்படுகிறது?
ஆளுங்கட்சிக்கு சாதகமான A கிராமத்தில் சந்தேகத்திற்குரிய 500 பெயர்கள் நீக்கப்படாமல் பாதுகாக்கப்படுகின்றன. புதிதாக 300 பெயர்கள் உடனடியாகச் சேர்க்கப்படுகின்றன. எதிர்க் கட்சிக்குச் சாதகமான B கிராமத்தில் சிறிய தவறுகளைக் காரணம் காட்டி 1200 பெயர்கள் நீக்கப்படுகின்றன. புதிதாக விண்ணப்பித்த 500 பெயர்கள் கிடப்பில் போடப் படுகின்றன.

இதன் இறுதி விளைவு என்ன?
ஆளுங்கட்சியின் வாக்கு வங்கியில் 800 வாக்குகள் உயர்கிறது. எதிர்க்கட்சியின் வாக்கு வங்கியில் 1700 வாக்குகள் குறைகிறது. ஆக, மொத்தமாக 2500 வாக்குகள் வித்தியாசம் உருவாகிறது. கடந்த முறை மூவாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ஆளுங்கட்சி, இந்த முறை எந்தவித EVM தில்லு முல்லும் செய்யாமலேயே தன் வெற்றியை எளிதாக்கிக் கொள்கிறது. இதைத்தான் நாடு முழுவதும் வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள 3040 தொகுதிகளில் பாஜக ரகசியமாகச் செயல்படுத்துகிறது. இது ஜனநாயகத்தின் மீதான ஒரு நிர்வாக ரீதியான சர்ஜிகல் ஸ்டிரைக்!தேர்தலுக்கு முன்பே முடிவாகும் தேர்தல்: பாஜகவின் புதிய இரகசிய ஆயுதம் SIR!

இந்த வாக்காளர் பட்டியல் முறைகேட்டிற்கான சதித்திட்டத்தை பாஜக கடந்த 10 ஆண்டுகளாகத் திட்டமிட்டு உருவாக்கியுள்ளது. 2014-2019 காலகட்டத்தில் ஆதார் மற்றும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (npr) நடை முறைகளை வலுப்படுத்தியது.

2019 க்குப் பிறகு, CAA- NRC சட்டங்களைக் கடுமையாக்கியது. 2023 இல் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டத் திருத்தத்தின் மூலம் மாநிலங்களிடமிருந்த அதிகாரங்களைப் பறித்தது. இறுதியாக தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் நடைமுறையில் மாற்றம் செய்து, அக்குழுவில் இருந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கி, அதற்குப் பதிலாக பாஜக அமைச்சர் ஒருவரை நியமித்தது உள்ளிட்ட பல்வேறு தொடர் நடவடிக்கைகளின் மூலம், நாட்டின் தேர்தல் முடிவுகளைத் தானே தீர்மானிக்கும் சக்தியாக மாற பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இந்த SIR முறைகேட்டின் தற்போதைய சோதனைக் களமாக பீகார் மாறி இருப்பதன் பின்னால் ஒரு நீண்ட அரசியல் வரலாறு உள்ளது. இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முன்பு வரை பீகார் என்பது சமூக நீதி அரசியலின் கோட்டையாக விளங்கியது. திரு.லாலு பிரசாத் யாதவ் மற்றும் திரு.நிதீஷ் குமார் ஆகியோரின் கரங்களில்தான் பீகாரின் அரசியல் அதிகாரம் இருந்தது.தேர்தலுக்கு முன்பே முடிவாகும் தேர்தல்: பாஜகவின் புதிய இரகசிய ஆயுதம் SIR!அங்கே நேரடியாகக் காலூன்ற முடியாத பாஜக,  கூட்டணிகள் என்ற பெயரில் கொல்லைப் புறமாக நுழைந்தது. திரு.ராம் விலாஸ் பாஸ்வான் அவர்களின் லோக் ஜனசக்தி கட்சியை உடைத்தது. கடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கூட்டணியில் இருந்த நிதீஷ்குமார் கட்சிக்கு எதிராக சிராக் பாஸ்வான் கட்சியைப் போட்டியிட வைத்து, நிதீஷ்குமார் கட்சியின் வெற்றியைப் பல தொகுதிகளில் தடுத்தது. இதன் மூலம் பாஜகவை விட குறைவான தொகுதிகளிலேயே நிதீஷ்குமாறின் கட்சி வெற்றி பெற்றது.

கூட்டணி வைத்த கட்சிகளையே கொஞ்சம் கொஞ்சமாக அழித்து தங்களை வளர்த்துக் கொள்வதுதான் 2014க்குப் பிறகு பாஜக இந்தியா முழுவதும் செயல்படுத்தும் ஒரு கொடூரமான சூழ்ச்சி. திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற, சித்தாந்தத்தில் உறுதியான கட்சிகளைத் தவிர, பல மாநிலக் கட்சிகள் பாஜகவின் இந்தச் சூழ்ச்சிக்கு இரையாகி உள்ளன. பீகாரில் அரசியல் ரீதியாக தங்களால் முழுமையாக வெற்றிபெற முடியாத சூழலில் இப்போது தனது இறுதி மற்றும் மிகவும் அபாயகரமான ஆயுதமான SIR முறை கேட்டை பாஜக கையில் எடுத்துள்ளது.

சட்டங்களின் மூலம் போடப்பட்ட சதிவலை:
இந்த வாக்காளர் பட்டியல் முறைகேட்டிற்கான உள்கட்டமைப்பை, பாஜக கடந்த 10 ஆண்டுகளாக பல சட்டத் திருத்தங்கள் மூலம் திட்டமிட்டு உருவாக்கியுள்ளது.தேர்தலுக்கு முன்பே முடிவாகும் தேர்தல்: பாஜகவின் புதிய இரகசிய ஆயுதம் SIR!

  • 2014-19 ஆதார் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (NPR) வலுப்படுத்தி அனைத்து தரவுகளையும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
  • 2019-21 CAA, NRC சட்டங்கள் மூலம் குடி உரிமைக்கான ஆவணங்களைக் கடுமையாக்கியது.
  • 2023: பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டத் திருத்தம் மூலம் மாநிலங்களிடமிருந்த அதிகாரத்தைப் பறித்து, அனைத்து பிறப்பு இறப்பு பதிவுகளையும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்தது.
  • 2023 தேர்தல் ஆணையர் நியமனச் சட்டத் திருத்தம்: இதுதான் இந்தச் சதித்திட்டத்தின் உச்சகட்டம். அதுவரை பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தான் தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுத்தது. ஆனால் பாஜக கொண்டு வந்த புதிய சட்டத்தின் மூலம், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டது.

நடுவர் ஆளுங்கட்சியின் கைகளில்: ஜனநாயகம் என்னவாகும்?
இப்போது சிந்தித்துப் பாருங்கள். வாக்காளர் பட்டியலில் ஒரு பெயரைச் சேர்க்கவோ, நீக்கயோ தேவைப்படும் ஆவணங்கள் (பிறப்பு/இறப்புச் சான்றிதழ், ஆதார், NPR) அனைத்தும் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கைகளில் உள்ளன. அந்த ஆவணங்களை வைத்து வாக்காளர் பட்டியலைத் திருத்தும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. அந்தத் தேர்தல் ஆணையத்தை நியமிக்கும் அதிகாரமும் இப்போது பாஜக அரசின் கைகளிலேயே உள்ளது. அப்படி என்றால் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து எழும் புகார்களை யார் பட்டியல் விசாரிப்பார்கள்? ஆளுங்கட்சிக்குச் சாதகமான ஒரு நடுவரிடம் நியாயம் எப்படிக் கிடைக்கும்? இதுதான் இன்று இந்திய ஜனநாயகம் சந்திக்கும் மிகப்பெரிய அபாயம்.தேர்தலுக்கு முன்பே முடிவாகும் தேர்தல்: பாஜகவின் புதிய இரகசிய ஆயுதம் SIR!விழித்தெழ வேண்டிய நேரம்!
மக்கள் அனைவரும் தேர்தலை, பிரச்சாரங்கள், பேரணிகள் இறுதியாக வாக்குப்பதிவு நாளன்று EVM இயந்திரத்தில் ஒரு பொத்தானை அழுத்துவது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையான தேர்தல் வாக்குப்பதிவிற்கு பல மாதங்களுக்கு முன்பே, வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் மிக அமைதியாக நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றன.

வாக்காளர் பட்டியலைத் தங்களுக்குச் சாதகமாகத் திருத்தி எழுதும் ஒரு சூழலில் தேர்தல் எப்படி நேர்மையாக இருக்க முடியும்? எனவே, நாம் கேட்க வேண்டிய கேள்வி ‘தோதல் நேர்மையாக நடக்குமா?’ என்பதல்ல, மாறாக ‘நாம் ஏற்கனவே தாமதித்து விட்டோமா?’ என்பதுதான்.தேர்தலுக்கு முன்பே முடிவாகும் தேர்தல்: பாஜகவின் புதிய இரகசிய ஆயுதம் SIR!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், எங்களின் இந்தியா கூட்டணியும், பாஜகவின் இந்த ஜனநாயகப் படுகொலையை ஒருபோதும் அனுமதிக்காது. சட்ட ரீதியாகவும், மக்கள் மன்றத்திலும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இந்திய ஜனநாயகத்தைக் காக்க அனைத்து சக்திகளும் ஓரணியில் திரள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஸ்டாலின் பிரம்மாண்ட வெற்றி பெறுவார்! எடப்பாடி பாடு திண்டாட்டம்! ரவீந்திரன் துரைசாமி பேட்டி!

MUST READ