Homeசெய்திகள்கட்டுரைபெரிய மனிதர் என்பதை எப்படி அறிவது – மாற்றம் முன்னேற்றம் – 14

பெரிய மனிதர் என்பதை எப்படி அறிவது – மாற்றம் முன்னேற்றம் – 14

-

14. பெரிய மனிதர் என்பதை எப்படி அறிவது  – என்.கே.மூர்த்தி

”அதிர்ஷ்டம் வந்தாலும், வராவிட்டாலும், துரதிஷ்டத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய துணிச்சலினால் எதையும் சாதித்து விடலாம்”  – ஜி.டி.நாயுடு

பதினாறிலிருந்து இருபத்து மூன்று வயது வரை இருப்பவர்கள் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு இருப்பார்கள் என்று ஆங்கில இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர் குறிப்பிடுகிறார். இவர்களை பதின்மப் பருவம் என்று அழைக்கின்றனர். நானூறு ஆண்டுகளாக பதின்மப்பருவத்தினர் இப்படித்தான் இருக்கின்றார்கள்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

 

பதின்மப் பருவம்

பதின்மப் பருவத்தினர் மீது திணிக்கப்படும் வரையறைகளை தாண்டக்கூடியவர்களாகவும், பெற்றோர்களின் ஆசைகளை மீறக் கூடிய வர்களாகவும் இருப்பார்கள் என்று ஜான் அபெட் என்ற அறிஞர் குறிப்பிடுகிறார்.
அவர்களையும் மீறி அந்த பருவத்தில் மூளையில் ஏதோ விபரீதம் நடக்கிறது என்றே கருத வேண்டும். ஆனால் இந்த பருவத்தில் உள்ள இளைஞர்களுக்கு போதிய வழிகாட்டுதலும், ஆலோசனைகளும் இருந்தால் படிப்பிலும், தொழிலிலும் வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

வழிகாட்டுதல் இல்லாமல் தவறாகப் பயன்படுத்துபவர்கள், சிக்கலில் மாட்டிக் கொண்டு சீரழிந்து விடுகிறார்கள். சட்டென உணர்ச்சிவசப்படுதல், திடீர் தற்கொலை முயற்சி, எதிர்காலம் குறித்து எவ்வித அக்கறையும் இல்லாமல் போதை போன்ற தீய பழக்கத்திற்கு ஆளாகி விடுகிறார்கள்.

இது போன்ற இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த நூலை எழுதுகிறேன்.

இஸ்ரேலியர்களின் தீர்க்கதரிசியான மோசஸ் தன் சகாக்களை வழிநடத்திப் பயணம் செய்யும் போது செங்கடல் குறுக்கீடு இருந்தது. கடலை எப்படி தாண்டி செல்வது என்று மோசஸ் மலைத்து நின்றார். “பிதாவே எங்களுக்கு உதவி செய்யும்’’ என்று வேண்டினார். அப்போது தோன்றிய இறைவன், ‘’இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்? உன் சகாக்களை தன்னம்பிக்கையுடன் முன்னேறி செல்லச் சொல்லும், தானாக வழி கிடைக்கும்’’ என்று சொல்லி மறைந்தார். அதேபோல் மோசஸ் சகாக்கள் தன்னம்பிக்கையுடன் கடலை நோக்கி நடந்தார்கள். செங்கடல் பிளந்து அவர்களுக்கு வழிவிட்டது.

இளைஞர் சமுதாயம் என்பது மாபெரும் சக்தி வாய்ந்தது. அவர்களுக்கு குறிப்பிட்ட வயதில் இது போன்ற பிரச்சினை இருப்பது இயல்பானது. அதனால் அவர்களுக்கு முறையான ஆலோசனைகளை இந்த நூல் வழங்கும்.

அவர்களின் வாழ்க்கையையே மாற்றியமைக்க முடியும்

நாம் செய்ய வேண்டியது எல்லாம் இந்த நூலை அந்த இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமே. இந்த நூலை அவர்கள் தொட்டு பிரித்து விட்டாலே அவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதை நம்மால் உணர முடியும்.

இளைஞர்களின் மனவோட்டத்தை மாற்றி அமைப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கையையே மாற்றியமைக்க முடியும் என்பதே என் தலைமுறையின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு என்கிறார் வில்லியம் ஜோன்ஸ்.

எல்லா மனிதர்களுக்கும் மனத்தேவை என்று ஒன்று இருக்கிறது. அதனை அவர்களின் ஆழ்மனத்தேவை என்று கூட சொல்லலாம். இந்த தேவை அனைவரும் அறிந்தவை தான். ஆனாலும் பின்பற்ற வேண்டிய நடைமுறை விதி இருக்கிறது.

பத்திரிக்கை துறைக்கு வருவதற்கு முன்பு நேரடி விற்பனையாளராக இருந்தேன். அதில் நான் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி முகம், பாவனை, பேச்சு, நடை என்று வேறுபட்டு இருக்கலாம். ஆனால் அத்தனை பேர் ஆழ்மனதிலும் எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். அது தான் நடைமுறை விதி.

1. தாங்கள் பாராட்டப்பட வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள்.

ஒரு எழுத்தாளர் தான் எழுதியதை எல்லோரும் பாராட்ட வேண்டும் என்று விரும்புகிறார். பேச்சாளர் தான் பேசியது எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். அரசியல்வாதிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் பாராட்டுபவர்களை மட்டும் அருகில் வைத்துக் கொள்வார்கள்.

 

அரசியல்வாதி அருகில் இருப்பவர்களோ, எதை எதை எல்லாம் பாராட்டக்கூடாதோ அதையெல்லாம் பாராட்டித் தொலைப்பார்கள். அதை ரசிக்கவே முடியாது. ஆனாலும் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

அவர்களின் வாழ்க்கையையே மாற்றியமைக்க முடியும்

சிலர் வெளிப்படையாக எதிர்ப்பார்ப்பார்கள். இன்னும் சிலர் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் பாராட்டை யாரும் ஒதுக்கி தள்ளமாட்டார்கள். சிலர் பெரியதாக முக்கியமில்லாத நபராகக் கூட இருக்கலாம். ஆனாலும் அவர்களிடம் ஏதோ ஒன்று இருப்பதை கண்டுபிடித்து பாராட்ட வேண்டும்.

2. தங்கள் சிறப்புகளை மற்றவர்கள் புகழ வேண்டும்.

பாராட்டுவதைப் போலவே, ஆழ்மனம் புகழுக்கும் ஏங்குகிறது. அந்த மனத் தேவையை உணர்ந்து கொண்டு நிறைவேற்ற வேண்டும்.

அடுத்தவர் செய்கின்ற சாதனைகளை நாம் புகழும் போது அவர்களின் மனத் தேவையை நிவர்த்தி செய்கிறோம். அவர் மனதளவில் உயர்கிறார். ஆகையால் நாம் மற்றவர்களின் செயல்களை பாராட்டுவதற்கும், புகழ்வதற்கும் தயங்கவே கூடாது.

3. தாங்கள் முக்கியமானவர் என்கிற எண்ணம்

திருமணம் போன்ற தனியார் நிகழ்ச்சியாகட்டும் அல்லது பொது நிகழ்ச்சியாகட்டும் அங்கு, தான் முக்கியமானவர் என்கிற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது. உண்மையில் முக்கியமானவர்களுக்கு அவரின் மனத்தேவை பூர்த்தியாகிவிடும். அவர்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்பில் மனம் நிறைவு அடைந்து விடும்.

ஆனால் எதற்கும் புரியோஜனம் இல்லாத நபர்களுக்கும் அது போன்று எண்ணம் இருக்கும். அவர்களிடம் உள்ள சிறப்பை கண்டுபிடித்து பாராட்ட வேண்டும்.

சிறப்பை கண்டுபிடித்து பாராட்ட வேண்டும்

வீடு வீடாக சென்று பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் போது வாடிக்கையாளரை திருப்திப்படுத்த நிறைய நடைமுறை விதிமுறைகளை பின்பற்றி இருக்கிறேன். அரசியல் பிரமுகர்களிடம் பழகி அவர்களின் வெற்றிக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறேன். அனைத்திற்கும் நடைமுறை விதிகள் முக்கியமானவை.

ஒரு மனிதர் எவ்வளவு உயர்ந்தவர் என்பதை சுலபத்தில் கண்டுபிடித்து விடலாம்.

1. பிறரை தாழ்வாக நினைக்கிறோமா?
2. பிறரை உயர்வாக உயர்த்த வேண்டும் என்று எண்ணுகிறோமா?

நம்முடைய பெரிய மனிதர் தன்மையை இதிலிருந்தே அறிந்து கொள்ள முடியும். நாம் பெரிய மனிதனாகும் போது பிறரை தாழ்வாக கருத கூடாது. இது மிகவும் தவறான சிந்தனை. பிறரை உயர்த்த நினைப்பவர் தான் உண்மையான உயர்ந்த மனிதர், பெரிய மனிதர்.

பெரிய மனிதர் என்றால் உருவத்தில் இல்லை. வகிக்கும் பதவியில் இல்லை. தனிப்பட்ட அகவளர்ச்சிக்கு முன்பு உருவ வளர்ச்சி, பதவி போன்றவை மிகவும் சிறியது. ஒருவரை நாம் எப்படி பார்க்கிறோம் என்பது தான் மிகவும் முக்கியம்.
நம்முடைய அகம் நோக்கு மிகவும் முக்கியமானது. நாம் மற்றவரை பார்க்கும் போது தாழ்வாக பார்க்கிறோமோ? அல்லது உயர்வாக பார்க்கிறோமோ? நமது பார்வை மற்றவரை பாதித்து விட கூடாது என்பதில் உறுதியாக இருப்போம்.                                                                                                                        தொடரும்…

MUST READ