spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை“பண வாசம்”- சம்பாத்தியத்தில் எவ்வளவு தானமாக வழங்க வேண்டும்? - குரு மித்ரேஷிவா

“பண வாசம்”- சம்பாத்தியத்தில் எவ்வளவு தானமாக வழங்க வேண்டும்? – குரு மித்ரேஷிவா

-

- Advertisement -

குரு மித்ரேஷிவா“பண வாசம்”- சம்பாத்தியத்தில் எவ்வளவு தானமாக வழங்க வேண்டும்? - குரு மித்ரேஷிவாகேள்வி: குரு, நான் நிறைய பணம் சம்பாதிக்கிறேன். சம்பாதித்த பணத்தை தானதருமம் செய்யுங்கள்,அப்போதுதான் உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும் என்று நிறைய பேர் என்னிடம் சொல்கிறார்கள். நான் எவ்வளவு தானமாகக் கொடுப்பது?

எவ்வளவு தானம் கொடுக்க வேண்டும் என்பதை யாருமே நிர்ணயம் செய்ய முடியாது.

we-r-hiring

இயற்கையின் சட்டத்தை முதலில் நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். இயற்கையின் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது. ஆனந்தமாக இருக்கலாம். எதற்காகப் பிறந்திருக்கிறீர்களோ அதன் முழுப்பயனையும் அடையலாம். இதற்கு மாறாக செயல்பட்டால் அனைத்துப் பிரச்சனைகளும் உங்களைத் தேடி வரும்.

இயற்கையிலும்கூட ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. நம் சமுதாயத்தையே எடுத்துக்கொள்ளுங்களேன். ஒருவர் பத்து ரூபாய்க்குப் படாத பாடுபடுவார். மற்றவரோ அலுங்காமல் குலுங்காமல் பத்தாயிரம் கோடிக்கு அதிபதியாக இருப்பார்.

“பண வாசம்”- சம்பாத்தியத்தில் எவ்வளவு தானமாக வழங்க வேண்டும்? - குரு மித்ரேஷிவா

ஒருவர் கூலி வேலை செய்பவர், மற்றொருவர் கடை முதலாளி, ஒருவர் அரசியல்வாதி, மற்றொருவர் பெரிய தொழில் அதிபர், இன்னொருவர் கலைத்துறையில் பெரும் புகழ் அடைந்தவர். இப்படி பல விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவரிடம் புகழ் நிறைய இருக்கிறது, மற்றவரிடம் பணம் நிறைய இருக்கிறது. ஒருவரிடம் பெரும் அதிகாரம் இருக்கிறது, இன்னொருவரிடம் பேருக்குக்கூட அதிகாரம் இல்லை ஏன் இப்படி? என்ன நியதி? இதெல்லாம் எப்படி தீர்மானமாகிறது? சார், இது தான் இயற்கையின் நியதி.

இயற்கை ஏன் ஒரு குறிப்பிட்ட மனிதனுக்கு ஒன்றைக் கொடுக்கிறது. அதுவும் அளவுக்கு அதிகமாகக் கொடுக்கிறது?

“பண வாசம்”- பட்ஜெட்டில் விழும் பொன்னாடை – குரு மித்ரேஷிவா

இந்த சிருஷ்டியைக் காப்பாற்றுவதற்காக.

ஆம், உங்கள் மூலமாக இந்த சிருஷ்டியைக் காப்பற்றுவதற்காகவே இயற்கை உங்களுக்கு அள்ளிஅள்ளிக் கொடுக்கிறது.

ஒரு மனிதனின் தேவைக்கு அதிகமாக இயற்கையின் தர்மப்படி செல்வம் வருகிறது என்றால் அதன் பொருள் செல்வம் முழுவதும் அவர் ஒருவருக்கானது மட்டுமேயல்ல என்பதுதான். இந்த உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் சேர்த்தே வழங்கப்பட்டிருக்கிறது. அதை விநியோகம் செய்யவேண்டியது உங்கள் கடமை. இயற்கை உங்களை அதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறது.உதாரணமாக, ஒரு ஆசிரியர் தன் அறிவை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். நான் படித்தேன், இது என்னுடைய அறிவு, இதை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்று வைத்துக்கொண்டார் என்றால் அவருடைய அறிவு அப்படியே இருக்கலாம். வளர வாய்ப்பில்லை. மாறாக, மறதியினால் குறையவும் கூடும். ஆனால், மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கும்போது தன்னியல்பாக நிறைய வாசிப்பு, முன்தயாரிப்பு, தகவல் சேகரிப்பு போன்றவை நடக்கும். அறிவு பல்கிப் பெருகும்.

பகிர்ந்துகொள்ளாதபோது அறிவு மட்டுமல்ல. எதுவுமே பெருகாது. மாறாக, புதிதாக வரவேண்டியதும்கூட வராமல் நின்றுவிடும்.“பண வாசம்”- சம்பாத்தியத்தில் எவ்வளவு தானமாக வழங்க வேண்டும்? - குரு மித்ரேஷிவா

நீங்கள் ரொம்ப காலம் ஆராய்ச்சி செய்து ஒரு பொருளைக் கண்டுபிடிக்கிறீர்கள். இதைக் கண்டுபிடித்தது. நான், வடிவமைத்தது நான் ஆகவே, யாருக்கும் தரமாட் டேன் எனப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிக்கொண்டீர்கள் என்றால் அதனால் யாருக்கு என்ன பயன்? அந்தக் கண்டுபிடிப்பு பயனாளர்களைச் சென்று சேராவிட்டால் உங்களுக்கு வருமானம் எங்கிருந்து வரும்? அதிக அளவில் உற்பத்தி செய்து விற்பனை செய்தால்தானே வருமானம் வரும். அந்தப் பணத்தைக் கொண்டு மீண்டும் பொருட்கள் தயாரித்து விற்கலாம். இதுவொரு சுழற்சி முறை.

இயற்கையும் இதே சுழற்சிமுறையில் இயங்கக்கூடியதுதான். இதில் விசேஷம் என்னவென்றால் இயற்கை அளப்பரிய கருணை மிக்கது. ஒன்று கொடுத்தால் ஒன்பதாகத் திரும்பக் கொடுக்கும் இயல்புடையது இயற்கை.

“பண வாசம்”- மதிப்புக் கூட்டப்பட்ட பணம் – குரு மித்ரேஷிவா

MUST READ