spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜய் A1! ஆதவ் A2! மதியழகன் உடைத்த ரகசியம்! விசாரணையில் திடுக்கிடும் உண்மை வெளியானது!

விஜய் A1! ஆதவ் A2! மதியழகன் உடைத்த ரகசியம்! விசாரணையில் திடுக்கிடும் உண்மை வெளியானது!

-

- Advertisement -

கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற பாஜக மறுத்து விட்ட நிலையில், தவெக தரப்பில் காங்கிரஸ் கட்சியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது என்று பத்திரிகையாளர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர் சத்தியராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, கரூர் துயர சம்பவத்தின் 16ஆம் நாள் துக்கம் முடிந்து உடன் அதுகுறித்து பேசுவதாக தெரிவித்துள்ளார். கரூர் துயர சம்பவத்தின்போது விஜயுடன் ஆதவ் அர்ஜுனா இருந்தார். அவர் இந்த வழக்கில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார். சம்பவத்திற்கு பின்னர் டெல்லிக்கு புறப்பட்டு சென்ற ஆதவ் அர்ஜுனா இரண்டு வேலைகளை பார்க்கிறார். முதலாவது காங்கிரஸ், பாஜக தரப்பு ஆட்களை சந்திக்க முயற்சிக்கிறார். மற்றொன்று வழக்குகளை நடத்த வழக்கறிஞர்களை பிடித்து மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இதில் மிகப்பெரிய மோசடி வேலைகளை ஆதவ் அர்ஜுனா செய்திருக்கிறார். சமீபத்தில் ட்ரைப்ஸ் ஊடகத்தின் செய்தியாளர் கரூருக்கு சென்று களஆய்வு நடத்துகிறபோது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு எவ்வளவு முறையற்றது என்பது தெரிகிறது. மனுதாரர்களுக்கே தெரியாமல் உச்சநீதிமன்றத்தில் எப்படி மனுத்தாக்கல் செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டதில் அதிமுகவும், ஆதவ் அர்ஜுனாவும் சேர்ந்து ஒரு சதியை செய்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த சதியின் தொடர்ச்சிதான் இது. ஆதவ் அர்ஜுனா டெல்லி செல்கிறபோது சில முக்கியமான வீடியோ ஆதாரங்களை டெல்லிக்கு எடுத்துச் சென்றுள்ளார். மற்றொரு புறம் இதுபோன்ற போலி மனுக்களை உருவாக்கி, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதில் எந்த வழக்கும் நீதிமன்றத்தில் நிற்காது. காரணம் மனுதாரரே நீதிபதியை பார்த்து அந்த மனுவுக்கும், தனக்கும் தொடர்பு இல்லை என்று சொல்கிறார். ஆதவ் அர்ஜுனா இந்த வழக்கில் இவ்வளவு முனைப்பு காட்டுவதற்கு காரணம் என்ன என்றால்? கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகனை எஸ்.ஐ.டி காவல் துறையினர்  2 நாள் காவலில் எடுத்து விசாரித்தபோது, அவரிடம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது யார் என்று கேட்கப்பட்டுள்ளது. அதில் சில விஷயங்களை மதியழகன் செய்துள்ளார். ஆனால் சில விஷயங்களை அவர்கள் முடிவு செய்ய வில்லை. கரூரில் கூட்டம் நடத்த வேண்டும் என்பது ஆதவ் அர்ஜுனாவின் திட்டமாகும். கரூருக்கு 7.45க்கு தான் விஜய் வர வேண்டும் என்பதும் ஆதவின் திட்டமாகும்.

கரூர் சம்பவம்: விஜய்க்கு கண்டனம்.... சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கரூரில் 63 டிரோன் கேமராக்களை பயன்படுத்தி படம்பிடிக்க வேண்டும் என்கிற அஜெண்டாவை செட் செய்தது ஆதவ் அர்ஜுனா. ஹெச்.வினோத், விஜயை வைத்து ஜனநாயகன் என்கிற படத்தை இயக்குகிறார். அந்த படத்தை வெளியிடுகிறபோது படத்தின் டீசர், பாடல்களில் இந்த காட்சிகளை பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த 63 டிரோன் கேமராக்களை செட் செய்தது யார் என்று விசாரிக்கும்போது இது தலைமை கழகத்தின் ஏற்பாடு என்று மதியழகன் தெரிவித்துள்ளார். தலைமைக் கழகம் என்கிறபோது விஜய், ஆதவ், புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் தான். இவர்கள் தான் விஜய் எத்தனை மணிக்கு பிரச்சாரத்திற்கு வர வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.  ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பதற்கான வாய்ப்புகள் 100 சதவீதம் இருக்கிறது. இதற்கு பயந்துதான் எல்லோரும் ஓடி இருக்கிறார்கள். இது தொடர்பாக நக்கீரன், மூத்த பத்திரிகையாளர் உமாபதி போன்றவர்கள் இது தொடர்பான ஆதாரங்களை வெளிக்கொண்டு வந்துள்ளனர். முழுக்க முழுக்க சினிமா படக்காட்சிக்காக கரூர் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்பது வெளியே தெரிந்தால், அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்.

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கூடாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்..!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவ மரணங்களுக்கு முழுக்க முழுக்க ஆதவ் அர்ஜுனா தான் காரணம். காவல்துறையினர் அங்கே போக வேண்டாம் என்று தடுத்தபோதும் அவர்தான் அங்கே போயுள்ளனர். இந்த குற்றத்தில் விஜயும், ஆதவ் அர்ஜுனாவும் ஏ1 தான். அதனால் தான் ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு ஓடிப் போய் பொய் மனுக்களை உருவாக்குகிறார். ஏமூரை சேர்ந்த செல்வராஜ் மனுவை அதிமுகவின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தான் வேலை வாங்கித் தருவதாக கூறி கையெழுத்து பெற்றுள்ளார். இந்த மனுக்கள் எல்லாம் சென்னை உயர்நீதிமன்றம் அமைத்திருக்கும் எஸ்.ஐ.டி விசாரணையை ரத்து செய்வதற்காக தான். ஏனென்றால் எஸ்.ஐ.டி விசாரணை நடைபெற்றால் கரூரில் ஜனநாயகன் பட ஷுட்டிங் நடைபெற்றது தெரிந்துவிடும். அது நடைபெற்றுவிட்டால், யார் போலீசார் தடுத்தபோதும் விஜயை போகலாம் என்று சொன்னார்கள் என்பது தெரியும். யார் விஜயை தாமதமாக வர சொன்னது என்று தெரிந்துவிடும். எனவே பாஜகவிடம் பேசி சிபிஐ விசாரணையை சிபிஐக்கு மாற்றலாம் என்று நினைக்கிறார்கள்.

அமித்ஷா, உடனடியாக இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் அமித்ஷா அப்படி செய்யவில்லை. அவர் இந்த விவகாரத்தில் எஸ்.ஐ.டி ஆதாரங்கள் வெளியாகி தவெக அடிபட்ட பிறகு, அப்போது சிபிஐக்கு மாற்றுகிறோம். நாங்கள் தரும் இடங்களில் போட்டியிட வேண்டும் என்று தவெகவை கூட்டணிக்கு பணிய வைக்க நினைக்கிறார். இதில் கவனிக்கத்தக்க மற்றொரு விஷயம் பாஜக தரப்பில் சிபிஐ விசாரணைக்கு மறுத்து விட்டதால், அடுத்தபடியாக காங்கிரஸ் தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ராகுலிடம் பேசி, எஸ்.ஐ.டி விசாரணையில் இருந்து தங்களை காப்பாற்றிவிட முதலமைச்சருக்கு அழுத்தம் தரவும், காங்கிரஸ் சொல்வதை தாங்கள் கேட்பதாவும் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த வழக்கறிஞர் ஒருவர் பஞ்சாயத்து பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் விஜயும், ஆதவ் அர்ஜுனாவும் மாட்டி விட்டார்கள். ஜனநாயகன் பட ஷுட்டிங், போலி மனுத்தாக்கல் செய்தது என்று எல்லாவற்றுக்கும் மொத்தமாக இவர்கள் மாட்டுவார்கள். பொறுத்திருந்து பார்ப்போம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ