மதுரவாயல் காவல்நிலையம் பிரிக்கப்பட்டு, புதிதாக வானகரம் காவல்நிலையம் இன்று திறக்கப்பட்டது. இதனை தொடா்ந்து உள்ளூர் மக்கள் தங்களது முதல் கோரிக்கையை வைத்தனா்.சென்னை கோயம்பேடு காவல் மாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த மதுரவாயல் T4 காவல்நிலையம் நிர்வாக வசதி, மக்கள் தொகை பெருக்கம் மற்றும் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் புதிதாக வானகரம் காவல்நிலையம் இன்று திறக்கப்பட்டது. சென்னை கூடுதல் கமிஷ்னர் பிரவஷ்குமார் காவல்நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் கல்யாண், கோயம்பேடு துணை ஆணையர் அதிவீரபாண்டியன், உதவி ஆணையர்கள் பாலகிருஷ்ணபிரபு, செம்பேடுபாபு, ஆய்வாளர்கள் மகேஸ்வரி, பூபதிராஜ், கோபி மற்றும் பல காவலர்கள் கலந்துகொண்டனர். உள்ளூர் மக்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன், தாங்கள் வசிக்கும் நூம்பல் கிராமம், கரும்புள்ளி பகுதி என காவல்துறையினரால் அழைக்கப்படுவதாகவும், நீண்ட நாட்களாக உள்ள இந்த அவப்பெயரை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனாா்கள்.
மாற்று திறனாளிகளின் பழைய பெயரை உச்சரித்தது தவறு – துரைமுருகன் வருத்தம்
