மணிப்பூரில் பழங்குடியின பெண் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வியழக்கிழமை அனறு மணிப்பூர் ஜிரிபாம் மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான 31 வயதான பழங்குடியினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
தன் மனைவியை வீடு புகுந்து வன்முறையாளர்கள் பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்து கொலை செய்ததாக காவல்நிலையத்தில் கணவர் புகார் அளித்துள்ளார்.
புகரின் அடிப்படையில் ஜிரிபாம் காவல் நிலைய போலீஸார் இனரீதியான வகுப்புவாத, பாலின அடிப்படையிலான கற்பழிப்பு மற்றும் கொலை, சொத்து அபகரித்தல், சோதப்படுத்துதல் மற்றும் அத்துமீறல் உள்ளிட்ட குற்றவியல் அடிபடையில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
விசாரனையில், தாக்கியவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்தார்கள் எனவும் ஜிரிபாமின் ஜைரவ்ன் கிராமத்தில் உள்ள பழங்குடியினக் குடியிருப்பை ஆக்கிரமித்து, ஆதரவற்ற பாதிக்கப்பட்டவரைத் தாக்குவதற்கு முன்பு குடியிருப்பாளர்களை பயமுறுத்தி உள்ளனர் என்பது தெரியவருகிறது. அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தி 17 குடியிருப்புகளை தீ வைத்து எரித்து மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்தனர் என்றும் கூறப்படுகிறது.
கும்மிடிப்பூண்டி அருகே சரக்கு லாரி மீது ஈச்சர் லாரி மோதி விபத்து – ஓட்டுநர் பலி