spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஆந்திர முதல்வரையும் விட்டுவைக்கவில்லை… ஏ.ஐ. மூலம் நூதன மோசடி…

ஆந்திர முதல்வரையும் விட்டுவைக்கவில்லை… ஏ.ஐ. மூலம் நூதன மோசடி…

-

- Advertisement -

ஆந்திர முதல்வர் சந்திரபாபு பெயரில் வீடியோ அழைப்புகள் செய்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர முதல்வரையும் விட்டுவைக்கவில்லை… ஏ.ஐ. மூலம் நூதன மோசடி…

ஏ.ஐ.வந்த பிறகு, எது உண்மையானது, எது போலி என்பது தெரியாத சூழ்நிலைஉள்ளது. இதன் காரணமாக, பலர் ஏமாற்றப்படுகிறார்கள். அதேபோல், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பெயரில் வீடியோ அழைப்புகள் செய்து தெலுங்குதேசம் கட்சித் தலைவர்களை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) பயன்படுத்தி ஆந்திர முதல்வர் சந்திரபாபு மற்றும்முன்னாள் அமைச்சர் தேவினேனி உமா வீடியோ அழைப்பு செய்ததாக தெலுங்கானா  மாநில தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களை ஏமாற்றியுள்ளனர்.

we-r-hiring

கடந்த மாதம் 30 ஆம் தேதி, கம்மம் மாவட்டத்தில் உள்ள சத்துப்பள்ளியைச்சேர்ந்தசில தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களுக்கு ஒருவர் போன் செய்துள்ளாா். அவர் தன்னை முன்னாள் அமைச்சர் தேவினேனி உமா பி.ஏ என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளாா். மேலும் சிறது நேரத்தில் அமைச்சர் தேவினேனி உமா வீடியோ அழைப்பு செய்வாா் எனக் கூறியுள்ளாா். அவர் சொன்னது போலவே, சிறிது நேரம் கழித்து தேவினேனி உமா போன்று வீடியோ அழைப்பு செய்துள்ளாா்.

தெலுங்கானாவில் உள்ள தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களின் பிள்ளைகளுக்கு கல்விக்கு உதவ வேண்டும் என்று கூறி அதற்காக மூன்று தொலைபேசி எண்களைக் கொடுப்பதாகவும் அந்த எண்களுக்கு போன்பே மூலம் பணம் அனுப்புமாறு அவர் தெரிவித்துள்ளாா். தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் அதை உண்மை என்று நம்பி ஒவ்வொருவரும் ரூ.35 ஆயிரம் அனுப்பியுள்ளனர்.

அந்த நபர் மீண்டும் இந்த மாதம் 7 ஆம் தேதி, தேவினேனி உமா என்ற பெயரில் அவர்களை அழைத்துள்ளாா். அவர்களிடம் தெலுங்கானா உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு கட்சி சார்பில் பி. படிவம் தருவதாக உறுதியளித்தார். இதற்காக சந்திரபாபு நாயுடு உங்களிடம் பேசுவார் என்று கூறியுள்ளாா். அதேபோன்று சிறிது நேரத்திற்குப் பிறகு, சந்திரபாபுவைப் போல தோற்றமளிக்கும் ஒருவர் வீடியோ அழைப்பில் பேசியுள்ளாா். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ளவர்கள் பெயர்களைச் சேகரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளாா்.

பின்னர் தேவினேனி உமா போன்று மீண்டும் அழைத்து, அமராவதிக்கு வந்தால், சந்திரபாபுவிடம் அழைத்துச் சென்று கட்சி பி. படிவங்களை வாங்கி கொடுப்பதாகக் தெரிவித்துள்ளாா். விஜயவாடாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கும்படி குறிப்பிட்டுள்ளாா்.  அதன் பிறகு, அவர் ஹோட்டலுக்கு அழைத்து, கட்சி தலைவர்கள் வருவதாகவும், அவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்யும்படி கூறி அந்த பில் நானே செலுத்துவதாகவும் கூறியுள்ளாா்.

அவர்களும் அதை உண்மை என்று நம்பி சத்துப்பள்ளியைச் சேர்ந்த 18 தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் புதன்கிழமை விஜயவாடா சென்று அந்த ஹோட்டலில் தங்கியுள்ளனர். அந்த நபர் புதன்கிழமை மாலை, மீண்டும் மற்றொரு வீடியோ அழைப்பை மேற்கொண்டு முதல்வர் சந்திரபாபுவிடம் 8 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு நபரும் ரூ. 10,000 அனுப்ப வேண்டும் என்று கூறியதால் அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், ஹோட்டல் ஊழியர்கள் உணவு கட்டணத்தை செலுத்துமாறு வற்புறுத்தியதால், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விஷயம் போலீசாருக்கு எட்டியது. இதனால், களத்தில் இறங்கிய போலீசார் தேவினேனி உமாவை அழைத்துள்ளனர்.  உடனடியாக பதிலளித்த அவர், தான் யாருக்கும் வீடியோ கால் செய்யவில்லை என்றும், ஏலூரு மாவட்டத்தைச் சேர்ந்த பார்கவ் என்ற நபர் அனைவரையும் இது போன்று வீடியோ அழைப்பில் அழைத்து ஏமாற்றுவதாகவும் இதுகுறித்து போலீசிலும்  புகார் அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் தேவினேனி உமா கூறியுள்ளாா்.

இந்த உண்மையை அறிந்த கம்மம் மாவட்டத் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இது குறித்து புகார் அளித்தால் தங்கள் நற்பெயர் கெட்டுவிடும் என்று கூறி தலைவர்கள் அனைவரும் வீடு திரும்பினர்.

‘லப்பர் பந்து’ பட இயக்குனரின் அடுத்த படத்தில் தனுஷ்…. இசையமைப்பாளர் யார் தெரியுமா?

MUST READ