கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு.
கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஒரு கோடியே 60 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு தன்னை ஏமாற்றியதாக உளுந்தூர்பேட்டையை சேர்ந்த அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணன் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி அன்று புகார் மனு அளித்திருந்தார்.
அதில் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட கழகச் செயலாளரும் உளுந்தூர்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு ஒரு கோடி 60 லட்ச ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை அந்த பணத்தை திரும்ப கேட்டு அவரது வீட்டிற்கு சென்றபோது தன்னை அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தனது உயிருக்கு குமரகுரு மற்றும் அவரது மகன் நமச்சிவாயம் ஆகியோர் மூலம் ஆபத்து இருப்பதாகவும் அவர் அளித்த அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரை தொடர்ந்து வழக்கறிஞர் கிருஷ்ணன் அதிமுகவிலிருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். புகார் மனு அடிப்படையில் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது அசிங்கமாக திட்டி தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல், வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 30-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளியின் வளர்ச்சிக்காக 2ம் வகுப்பு மாணவர் நரபலி… பள்ளி இயக்குநர் உள்ளிட்ட 5 பேர் கைது
இந்த நிலையில் அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் நேரில் சந்தித்து தன் மீது பொய்யான புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமாக உள்ள கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் கள்ளக்குறிச்சி அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் நீதிமன்றங்களில் முன்ஜாமின் கோரி மனு அளித்திருந்த நிலையிலும் இதுவரை முன்ஜாமின் கிடைக்காத நிலையில் நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு நேரில் சந்தித்து தன் மீது பொய்யான புகார் அளித்துள்ளதாக கூறி மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.