Homeசெய்திகள்இந்தியாஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த வழக்கு: நாளை விசாரணை…நீதிபதி உறுதி!

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த வழக்கு: நாளை விசாரணை…நீதிபதி உறுதி!

-

- Advertisement -

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக நகைச்சுவை நடிகர் குணால் காம்ராவுக்கு எதிராக மும்பை காவல்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை அவசர வழக்காக எடுக்க முறையீடு!ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த வழக்கு: நாளை விசாரணை…நீதிபதி உறுதி!நகைச்சுவை நடிகர் குணால் காம்ரா அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் சிவசேனாவை உடைத்து பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து  ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவி வகித்தது குறித்து விமர்சித்து இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மகாராஷ்டிரா மாநில தற்போதைய துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள், குனால் காம்ரா ஸ்டுடியோவை சேதப்படுத்தினர். இதன்பிறகு தமிழ்நாடு வந்த குணால் காம்ரா, தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில் சென்னை உயர்நீதிமன்றமும் ஜாமீன் வழங்கியது.

ஆனால் மகாராஷ்டிரா துணை முதலமைச்சருக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக கூறி மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் குனால் காம்ரா வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கோரி நீதிபதி சாரங் கோட்வால் அமர்வில் இன்று முறையிட்ட போது நாளை வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி உறுதி அளித்துள்ளார்.

தொழிலாளர்களுக்கு விரோதமான இச்சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது…. திருமாவளவன் வேண்டுகோள்…..

MUST READ