வேகமாகவும் கவனக்குறைவோடு கார் ஓட்டுபவர்களின் மரணத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டி உயிரிழந்த நபரின் வாரிசுதாரர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என்ற கர்நாடக மாநில உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதிப் படுத்தியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி என்.எஸ்.ரவிஷா என்பவர் காரில் அவரது தந்தை, சகோதரி மற்றும் சகோதரியின் குழந்தைகளுடன் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் மிக வேகமாக காரை ஓட்டி சென்ற போது சாலையில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த என்.எஸ். ரவிஷா மட்டும் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் இழப்பீடு கேட்டு கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல், மிக வேகமாகவும், கவனக்குறையாகவும் காரை ஓட்டி சென்றதால் விபத்து ஏற்றபட்டுள்ளது.

ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததைமையால், எந்தவிதமான இழப்பீடும் சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் பெற முடியாது என கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை தற்போது உச்சநீதிமன்றமும் அங்கீகரித்து உறுதி செய்துள்ளது.
பதஞ்சலி நிறுவன விளம்பரத்திற்கு தடை… டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு…