spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகள் – மக்கள் கடும் எதிர்ப்பு!

ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகள் – மக்கள் கடும் எதிர்ப்பு!

-

- Advertisement -

ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு. அவரச தேவைக்கு உடனடியாக கடன் பெற முடியாத சூழல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நகை கடன் தொடர்பான புதிய விதியை திரும்ப பெற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகள் – மக்கள் கடும் எதிர்ப்பு!நகை கடன் வழங்க ரிசர்வ் வங்கியின் விதித்திருக்கும் புதிய கட்டுப்பாடுகளால் பலர் நகை கடன் பெற முடியாத சூழல் நிலவுகிறது. வங்கிகளில் குறைந்த வட்டிக்கு தங்க நகைகளை அடகு வைத்து அவசரகால நிதி தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் நடுத்தர வர்க்க மக்களுக்கு தங்க நகை கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் பேரிடியாக அமைந்துள்ளது. இதுவரை நகையின் மதிப்பில் இருந்து 80% வரை வழங்கப்பட்டு வந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின் படி நகையின் மதிப்பில் 75% தொகையை மட்டுமே கடனாக பெற முடியும்.

இதனால் கடன் பெறுபவர்களுக்கு குறைவான தொகையே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வங்கியில் அடமானம் வைக்கும் நகைகளுக்கே தான் உரிமையாளர் என்பதற்கான ஆதாரத்தை கடன் வாங்குபவர்கள் வழங்க வேண்டும் என்ற விதியால் பெரும்பாலான மக்கள் நகை கடன் பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்திய குடும்பங்களின் தங்க நகைகள், குடும்ப சொத்துக்களாக தலைமுறைகள் கடந்தும் பயன்பாட்டில் உள்ளதால் ஆவணங்களை வழங்குவது சாத்தியமற்றது. தங்க நகையின் தரம், தூய்மை குறித்து கடன் பெறுபவர்களுக்கு வங்கி சான்று வழங்க வேண்டும் என்ற விதியால் கடனாளி உடனே கடன் பெற இயலாது.

we-r-hiring

அதேபோல 22 காரட் தங்கத்தின் அடிப்படையில் 18 காரட் நகை மதிப்பீடு செய்யப்படும் என்ற புதிய விதியால் 18 காரட் தங்க நகைகளை அடமானம் வைப்பவர்களுக்கு கடன் தொகை குறையும் சூழல் உள்ளது. கடனை முழுமையாக செலுத்திய அன்றைக்கே அடமானம் வைக்கப்பட்ட நகைகள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடனை செலுத்திய 7 வேலை நாட்களுக்குள் நகைகளை திருப்பி தரவேண்டும் என்ற புதிய விதியால் மக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை ஏற்படும்.

கடன் பெற்ற அதே கிளையில் நகைகள் வைக்கப்படும் நிலையில், நகைகள் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? என்ற கேள்வியும் எழுகிறது. இந்த விதியால் வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் வாய்ப்பு உள்ளது. ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறை தொடர்பான அறிவிப்பில் சில அம்சங்கள் எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் விதமாக இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுக்கின்றது.

பழைய துணி அதிகமாகிவிட்டதா எங்கும் அலையாமல் பழைய துணிகளை விற்க புதிய செயலி…

MUST READ