Homeசெய்திகள்தமிழ்நாடுநீலகிரியில் 95% வளர்ச்சித் திட்டப் பணிகள் நிறைவு; தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விலையில்லா வீடுகள் விரைவில்...

நீலகிரியில் 95% வளர்ச்சித் திட்டப் பணிகள் நிறைவு; தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விலையில்லா வீடுகள் விரைவில் ஒப்படைக்கப்படும்: எம்.பி. ஆ.ராசா பேட்டி!

-

- Advertisement -

நீலகிரி மாவட்டம் முழுவதும் சுமார் 95 சதவீத வளர்ச்சித் திட்டப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். மேலும், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்காகக் கட்டப்பட்டு வரும் விலையில்லா வீடுகளின் பணிகளை உடனடியாக முடித்து, அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.நீலகிரியில் 95% வளர்ச்சித் திட்டப் பணிகள் நிறைவு; தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விலையில்லா வீடுகள் விரைவில் ஒப்படைக்கப்படும்: எம்.பி. ஆ.ராசா பேட்டி!

​உதகையிலுள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில், மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் (DISHA) இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை தாங்கினார். நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் உதகை சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்துத்துறை அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

we-r-hiring

​95% பணிகள் நிறைவு
​இக்கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு நிதிகளின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் விரிவான விளக்கம் கேட்கப்பட்டது. இதுவரை நடந்து முடிந்துள்ள பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்கள் அதிகாரிகளால் அட்டவணையாகச் சமர்ப்பிக்கப்பட்டன. ​கூட்டத்திற்குப் பின் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, ​”நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்கான மாவட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டத்தில் கிட்டத்தட்ட 95 சதவீதப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இன்னும் கூடுதலாகப் பகுதி வாரியாக என்னென்ன புதிய திட்டப் பணிகள் தேவை என்பதையும் கண்டறிந்துள்ளோம்.

நீலகிரியில் 95% வளர்ச்சித் திட்டப் பணிகள் நிறைவு; தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விலையில்லா வீடுகள் விரைவில் ஒப்படைக்கப்படும்: எம்.பி. ஆ.ராசா பேட்டி!

​தொழிலாளர்களுக்கு விலையில்லா வீடுகள்
​குறிப்பாக, கடந்த ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, தொடங்கி வைக்கப்பட்ட புதிய கட்டுமானத் திட்டப் பணிகள், அதிலும் குறிப்பாகத் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்காகக் கட்டப்பட்டு வரும் விலையில்லா வீடுகளுக்கான பணிகள் தற்போது மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை விரைந்து முடித்துத் தொழிலாளர்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ​ஒட்டுமொத்தமாக இந்த மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கான பணிகளில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து தங்களது உரிய பங்களிப்பை வழங்கி வருகிறோம். அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு தருகிறார்கள்.

​மழைப் பாதிப்புகளைச் சீரமைக்கத் தயார் நிலை
​தற்போது கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் பரவலாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஆங்காங்கே ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சீரமைக்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும் வருவாய்த்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளும் முழுத் தயார் நிலையில் உள்ளனர்.” இவ்வாறு எம்.பி. ஆ.ராசா தெரிவித்தார்.

புதுச்சேரி, தமிழகத்தில் கைவரிசை: ரூ.8 லட்சம் மதிப்புள்ள 8 டூவீலர்கள் பறிமுதல் – சென்னையைச் சேர்ந்த ‘நம்பர் 1’ கொள்ளையன் கைது!

MUST READ