திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் மருத்துவர் ராம்தாஸை சந்தித்த பின்பு, சேலம் பாமக எம் எல் ஏ அருள் சன் நியூஸ் சேனலுக்கு பேட்டி அளித்தாா்.அதில், மகளிர் மாநாடு பூம்புகாரில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறுவதால், மாநாட்டிற்கான முக்கியத்துவம் குறித்தும் அதிகளவு பெண்களை அழைத்து வர வேண்டுமென மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியதாகவும் தமிழக மக்கள் விரும்புகிற நல்ல கூட்டணி இருக்கும் என்றும் தேர்தலில் கூட்டணி குறித்து அறிவிக்கும் அதிகாரம் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு மட்டுமே உள்ளதாக தெரிவித்தார். ஊடகப்பேரவையில் அட்டக்கத்தி சிலர் இல்லாத பொல்லாததை தெரிவிக்கிறார்கள் மருத்துவர் அய்யா வாழ்க என குறிப்பிட்டாலே திட்டும் கூட்டம் ஒன்று உள்ளதாகவும் தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மக்கள் வாக்களித்துள்ளதால், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய கூடாதெனவும், ஐந்து ஆண்டுகள் முழுமையாக மக்கள் பணி செய்ய வேண்டுமென மருத்துவர் ராமதாஸ் கூறியதாக கூறினார். அன்புமணிக்கு கட்டாயம் மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கோம் பாமகவின் எதிர்காலம் அவர்தான் என்றும் மருத்துவர் ராமதாஸ் யாருடன் கூட்டணி வைக்கிறாரோ அவர்கள் தான் 2026 ஆட்சியமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மருத்துவர் அய்யா மீது அளப்பறிய அன்பு கொண்டவர் தான் செல்வபெருந்தகை சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து சட்டப் பேரவையில் பேசும் போது தங்களுக்கும் மருத்துவர் ராமதாசுக்கும் ஆதரவாக பேச கூடியவர் என பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், அன்புமணி ராமதாஸ் அவரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக அவருடைய ஆதரவாளர்களான சில அட்டகத்திகள் என்னை சமூக வலைதளத்தில் மிரட்டி வருகிறார்கள். என்னை பற்றி அவதூறு பரப்பி வருகிறார்கள். அதை பற்றி நான் கவலைப்பட போவதில்லை. என்னிடம் லைசன்ஸூடன் பெல்ஜியம் கை துப்பாக்கி இருக்கிறது. தேர்தல் நேரத்தில் போலீஸ் நிலையத்தில் அதை ஒப்படைத்துவிட்டேன். தற்போது அதை வாங்கி விடுவேன். மிரட்டல் பற்றி நான் பயப்படமாட்டேன் என்றார்.
ராமதாஸ் மீது பற்றுள்ள நான், திடீரென்று அன்புமணி ராமதாசை சந்திக்கும் தருணம் கவலையாக இருக்கும். அதை பற்றி நான் சிந்தித்து பார்க்கவில்லை. ஐயா தான் எங்களுக்கு முக்கியம். தொண்டர்கள், பொதுமக்கள், முதியோர்கள் துள்ளி குதிக்கும் வகையில் பாமக கூட்டணி அமையும். அது குறித்து வருகிற வியாழக்கிழமை ராமதாஸ் அய்யா அறிவிப்பார். அன்புமணி ராமதாஸ் எதற்காக டெல்லி சென்றார் என்பது எனக்கு தெரியாது என்றார்.
ரூ.5 கட்டணத்தில் இனிமையான ஒரு நாள்… குவியும் சுற்றுலா பயணிகள்…