spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎதிர்க்கட்சியினரையே கொலை செய்யும் அளவிற்கு திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?-எடப்பாடி கண்டனம்

எதிர்க்கட்சியினரையே கொலை செய்யும் அளவிற்கு திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?-எடப்பாடி கண்டனம்

-

- Advertisement -

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அஇஅதிமுக நிர்வாகி திரு. முத்துபாலகிருஷ்ணன் அவர்களை, திமுக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என அஇஅதிமுக பொதுச்செயலாளா்  எடப்பாடி K.பழனிச்சாமி கூறியுள்ளாா்.எதிர்க்கட்சியினரையே கொலை செய்யும் அளவிற்கு திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?-எடப்பாடி கண்டனம்மேலும் இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”இக்கொலைக்கு உள்ளாட்சி தேர்தல் போட்டியும் ஒரு காரணம் என செய்திகள் வருகின்றன. இதையும் “தனிப்பட்ட கொலை” என்ற அளவோடு தான் ஸ்டாலின் மாடல் திமுக அரசு கடந்து செல்ல முனையுமா?

திமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் என்பது இவர்களின் அராஜகத்திற்கு இடையில் தான் நடைபெறும் என்பது நாடறிந்த உண்மை. ஆனால், அதற்காக, எதிர்க்கட்சியைச் சார்ந்தோரை கொலை செய்யும் அளவிற்கு திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?

we-r-hiring

சட்டம் ஒழுங்கை அடியோடு சீர்குலைத்துவிட்டு, அதை தட்டிக் கேட்கும் இடத்தில் இருக்கும் எதிர்க்கட்சியினரின் உயிருக்கே பாதுகாப்பற்ற நிலையில், தமிழ்நாட்டை படுதாளத்திற்கு தள்ளியுள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

முத்துபாலகிருஷ்ணன் கொலை வழக்கில் தொடர்புள்ள திமுக பிரமுகர் கருணாகரன் உள்ளிட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளாா்.

ஓரம் கட்டப்படும் வைகோ! திமுகவில் சாரை சாரையாக வந்து சேரும் மதிமுக நிர்வாகிகள்!

MUST READ