spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகரூர் விவகாரம்.. சிபிஐ விசாரணை கோரி பாஜக மேல்முறையீடு!

கரூர் விவகாரம்.. சிபிஐ விசாரணை கோரி பாஜக மேல்முறையீடு!

-

- Advertisement -

கரூர் விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை என்பதால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.கரூர் விவகாரம்.. சிபிஐ விசாரணை கோரி பாஜக மேல்முறையீடு!

கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில், 25,000 மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தமிழக காவல்துறையில் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த விவகாரத்தில் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

we-r-hiring

ஆனால் மனுவை தாக்கல் செய்த நபருக்கும் கரூர் விவகாரத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? என கேள்வி எழுப்பி சிபிஐ விசாரணை கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ராகவாச்சாரி மூலமாக இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் , கரூர் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு நிர்வாகத்தினுடைய அலட்சிய போக்கை காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அதிக கூட்டம் கூடுவதாக தெரிந்தும் உரிய இடத்தை ஒதுக்காமல் அரசு நிர்வாகம் இருந்ததாகவும், எனவே 41 பேர் உயிரிழப்புக்கு முழு பொறுப்பு தமிழக அரசு தான் ஏற்க்க வேண்டும்  என  அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.

கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் போதிய அளவிலான பாதுகாப்பை அரசு வழங்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளது. மேலும், கூட்ட நெரிசல் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த உண்மை நிலையை வெளிக்கொண்டு வரவேண்டும் மற்றும் இதற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றால் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு காவல்துறை விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை அதன் காரணமாகவே சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளாதாக மனுவில் தெரிவித்துள்ளது. இந்த மனுவை ஏற்று இந்த மனு மீதான வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கரூர் சம்பவத்திற்குப் பிறகும் தவெக தலைவர் விஜய் அல்லது அவரது கட்சி எந்த தெளிவான விளக்கமும் அளிக்கவில்லை. விஜய்யின் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதேசமயம் பாஜக முன்னணியினர் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர். இதேநேரத்தில், தவெகவின் மவுனத்தை பாஜக சார்பில் பாதுகாக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இதன் மூலம், தவெக மற்றும் பாஜக இடையே நெருக்கம் இருக்கிறதா என்ற கேள்வி மேலும் வலுப்பெறுகிறது.

பிரேமலதா விஜயகாந்த் தாயார் காலமானார்…தலைவர்கள் இரங்கல்….

MUST READ