8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இன்று கனமழை, நாளை மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அந்த வகையில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை
நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
12 முதல் 20 செமீ வரை மழை பொழிவிற்கான வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவையில் இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை (apcnewstamil.com)
2 நாட்களுக்கு 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் என 2 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.