அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குக்கு தடை விதித்த உத்தரவை திரும்ப பெற்றது சென்னை உயர்நீதிமன்றம்.சூரியமூர்த்தி தரப்பில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதால் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். சூரியமூர்த்தி அதிமுக உறுப்பினர் அல்ல. இந்த வழக்கை தாக்கல் செய்ய அவருக்கு உரிமையில்லை என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதை மறைத்து தடை உத்தரவு பெற்றுள்ளனர் சூரியமூர்த்தி தரப்பினா்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்க வேண்டும் என எடப்பாடி தாக்கல் செய்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அரிதான தீர்ப்பு – சேலம் சிறப்பு நீதிமன்றம் அதிரடி
