தேர்தல் ஆணைய கடிதத்தில் அன்புமணி பெயர் இல்லை என ராமதாஸ் தரப்பில் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.
பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்தும், மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளதாக வழக்கறிஞர் பாலு சற்றுமுன் அறிவித்தாா். இதனால் பாமகவின் தலைமை, சின்னம் அன்புமணியின் வசம் வந்துள்ளதன் மூலம் தற்போழுது கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பம் தீர்ந்துவிட்டது. வரும் தேர்தலில் பாமக வேட்பாளர்களை அன்புமணிதான் அறிவிப்பாாா் எனவும், A.B படிவங்களில் அவர்தான் கையொப்பமிடுவார். மேலும் ராமதாஸின் வழியை பின்பற்றியே தாங்கள் பயணிப்போம் என்ற அவர், பிரிந்து சென்றவர்கள் தங்களுடன் வரலாம் எனவும் அழைப்பு விடுத்துள்ளாா்.
இந்நிலையில், பாமக எம்.எல்.ஏ. அருள் சேலத்தில் பேசியபோது,” பாமகவுக்கு சின்னம் மாம்பழம்தான், தலைவர் அன்புமணிதான் என்று தேர்தல் ஆணையம் எங்கும் குறிப்பிடவில்லை. தேர்தல் ஆணையம் கொடுத்த தகவலை வழக்கிறிஞர் பாலு தவறாக பரப்புகிறாா் என்று ராமதாஸ் அணி பொதுச்செயலாளர் முரளி சங்கர் குற்றம் சாட்டியுள்ளாா். மேலும், பாமக கட்சி அலுவலக முகவரியை சில மாதங்களுக்கு முன்பு திட்டமிட்டு மாற்றியுள்ளனர். பாமக அலுவலக முகவரியை திட்டமிட்டு மாற்றியதால் அவர்களுக்கு கடிதம் சென்றுள்ளது. தேர்தல் ஆணைய கடிதத்தில் எந்த இடத்திலும் மாநில தலைவர் அன்புமணி என குறிப்பிடவில்லை என்று ராமதாஸ் அணியினர் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளாா். மேலும், கொடி, சின்னத்தை பயன்படுத்த கூடாது என யாராலும் எங்களுக்கு தடை விதிக்க முடியாது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும், தலைவரும் ராமதாஸ் மட்டும்தான் என அவர் தெரிவித்துள்ளாா்.



