spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதேஜஸ்விதான் அடுத்த முதல்வர்! பீகாரில் அம்பலப்படும் சங்கிகள்! அய்யநாதன் நேர்காணல்!

தேஜஸ்விதான் அடுத்த முதல்வர்! பீகாரில் அம்பலப்படும் சங்கிகள்! அய்யநாதன் நேர்காணல்!

-

- Advertisement -

பீகார் சட்டப்பேரவை தேர்தல், இந்திய அரசியலுக்கே ஒரு மாற்றத்திற்கு வித்திடும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பீகார் தேர்தல் கள நிலவரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் மகாகாத்பந்தன் கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரிகள் இணைந்து போட்டியிடுகிறார்கள். அசாதுதீன் ஓவைசி தனித்து போட்டியிட்டு பாஜகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கப் போகிறார். பீகாரில் எந்த இடத்தில் பாஜக வெற்றி பெறுகிறது என்று கூர்மைப்படுகிறபோது, அவர்களுடைய வாக்காளர் பட்டியல் மோசடிகள் வெளியே வருகின்றன.

இப்படி மோசடி செய்து ஒவ்வொரு முறையும் அதிகாரத்தை கைப்பற்றுபவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று உழைப்பவர்கள், பிற்படுத்தப் பட்ட வகுப்பினர், பட்டியலின மக்கள், சிறுபான்மை மக்கள் ஒன்றாக சேர்ந்துள்ளனர். வாக்கு திருட்டு முறைகேட்டை ராகுல்காந்தி எடுத்து வைத்தபோது தேஜஸ்வி யாதவ் அதை ஆதரித்தார். இவை எல்லாம் உழைக்கும் மக்களிடத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. ஒரே மாதிரியாக சிந்திக்கூடிய இடத்திற்கு அவர்கள் வந்துவிட்டனர். அதன் விளைவுதான்  ராகுல்காந்தியும், தேஜஸ்வியும் செல்கிற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் வந்து பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் எல்லாம் பெரிய நில உடமையாளர்கள் தான். ஆனால் அங்கே விவசாய விளை பொருட்களுக்கு மிகவும் குறைந்த விலையே கிடைக்கிறது. விவசாய வருவாயில் மிகவும் கீழ்நிலையில் இருப்பது பீகார் மாநிலம் தான். சராசரியாக மாதம் ரூ.3500 தான் வருவாய் கிடைக்கிறது. அதேவேளையில் தமிழ்நாட்டில் மாதம் ரூ.11,000, பஞ்சாபில் ரூ.18,000, வடகிழக்கு மாநிலங்களில் ரூ.24,000 வருவாய் கிடைக்கிறது. அப்போது உரிமைகளை பறிக்கக்கூடிய கட்சியை ஒழித்துக்கட்டிவிட்டு நமக்கான கட்சிகளை கொண்டுவர வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதில் ஆர்.ஜே.டி உறுதியாக நிற்கிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ் லெனினிஸ்ட் கட்சிகளும் களத்தில் உள்ளனர்.

இவர்களை ஒழிப்பதற்காக SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. வாக்காளர் பட்டியலில் இருந்து பட்டியல் இனத்தவரையும், முஸ்லீம்களையும் 65 லட்சம் பேரை நீக்கினார்கள். அதற்கு பிறகு உச்சநீதிமன்ற உத்தரவின்படி நீக்கப்பட்டவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டதால் அது 47 லட்சம் ஆக குறைந்துவிட்டது. முன்பு பீகாரில் 7 கோடியே 74 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 7 கோடியே 40 லட்சமாக குறைந்துவிட்டது. இவற்றை எல்லாம் பார்த்து உச்சநீதிமன்றம் தடுத்திருக்க வேண்டும். ஆனால் தடுக்கவில்லை.

தற்போது எப்படி தேர்தல் நடைபெற போகிறது? அங்குள்ள மக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு எப்படி ஆதரவு அளித்து தூக்கி நிருத்தப் போகிறார்கள் என்பது தான் முக்கியமாகும். இதன் காரணமாக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கூடுதல் இடங்களை தர வேண்டும் என்று பிரச்சினை செய்கிறார்கள். லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் டெல்லிக்கு சென்று ராகுல்காந்தியை சந்தித்து பேசுவதற்கு காரணமும் இதுதான். பீகாரில் எதிர்க்கட்சிகளுக்கு வெற்றி நிச்சயம். அங்கு மக்கள் மத்தியில் எழுச்சி இருக்கிறது என்பதை வைத்துதான் கூடுதல் இடங்களை கேட்கிறார்கள்.

வடக்கு பீகாரில் பிராமணர்கள், மகதிக்கள், பனியாக்கள் எல்லாம் பாஜக, ஜேடியு ஆதரவாளர்கள் ஆவர். ஆனால் பீகாரின் மற்ற பகுதிகளில் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியலின மக்கள், சிறுபான்மையினர் 80 சதவீதம் வாக்காளர்கள் உள்ளனர். லாலுவும், நிதீஷ் குமாரும் ஒன்றாக இருந்தபோது பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர்கள் லாலுவுக்கு ஆதரவளித்தனர். உயர்ந்த சாதியினர் நிதிஷை ஆதரித்தார்கள். நிதிஷ் தானே உயர்ந்தவர் என்று சொல்கிறபோது கூட்டணி உடைந்தது. அதை பாஜக பயன்படுத்திக்கொண்டு இந்துத்துவா லாபியை வைத்து, நிதிஷை மட்டம் தட்டி அவர்கள் மேலே வந்துவிட்டனர். தற்போது தெளிவாக கூட்டணி வைத்திருக்கிறார்கள். வரக்கூடிய தேர்தலில் பாஜக எத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டாலும் மகாகாத்பந்தன் கூட்டணி வெற்றி பெறும்.

பீகாரில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில், ஆசாதுதீன் ஓவைசி கட்சி சில தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இது ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னடைவுதான். இந்த முறை அதை தாண்டுவார்கள் என்று தோன்றுகிறது. லாலு பிரசாத் வருவதற்கு முன்பாக பீகாரில் யாதவர்கள், மற்றவர்கள் வாக்களிக்கவே வர மாட்டார்கள். வாக்குச் சாவடிகள் கைப்பற்றும் நிகழ்வுகள் பீகாரில் தான் அதிகம் நடைபெற்றன. லாலு எழத் தொடங்கியதும் தான் கான்கிரீட் வீடுகளே கட்டிக் கொடுக்க தொடங்கினார்கள். அதன் காரணமாகவே லாலுவை இன்றும் அசைக்க முடியவில்லை.

மற்றொருவர் ராம்விலாஸ் பாஸ்வான், லோக் ஜனசக்தி கட்சியாக மாறி, அது பாஜக உடன் போய் சேர்ந்தது. இன்றைக்கு அந்த இடத்தில் மாற்று சிந்தனைகள் வர தொடங்கிவிட்டன. பிரசாந்த் கிஷோர், பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், பாஜக, ஜேடியுவுக்கு தான் அவர் பாதிப்பை ஏற்படுத்துவார். பிரசாந்த் கிஷோர் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்கிறார். அவர் தேர்தல் ஆலோசகராக செயல்பட்டவர்கள் எல்லாம் ஊழல் செய்யாதவர்களா? அப்போது பிழைப்பு ஒன்று. பேச்சு ஒன்றா?

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிர நடவடிக்கை பீகார் மக்களை பெரிய அளவில் பாதிப்பிற்குள்ளாக்கியது. அதில் ஏற்பட்ட எழுச்சி, இன்றைக்கு ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது. பாஜக பீகாரில் தோற்றுவிட்டார்கள் என்றால் அதன் பிறகு அவர்களை ஆர்எஸ்எஸ் விட மாட்டார்கள். அவர்கள் மோடி, அமித்ஷாவை ஒரு வழி செய்துவிடுவார்கள். பாஜகவுக்கு தேர்தல் பயம் இல்லாவிட்டால் 75 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயீரம் வீதம் ரூ.7ஆயிரத்து 500 கோடியை வழங்குவார்களா? அதுதான் ஜன் தன் அக்கவுண்ட். அனைத்து விதமான மோசடிகளையும் செய்துவிட்டு, நாங்கள் பணம் கொடுத்ததால் மக்கள் ஓட்டு போட்டு விட்டார்கள் என்பார்கள். எனவே பீகார் தேர்தல் இந்திய அரசியலுக்கே ஒரு மாற்றத்திற்கு வித்திடும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ