Homeசெய்திகள்இந்தியாகாசியாபாத் சிறுமி கொலை வழக்கு: காவல்துறை மற்றும் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

காசியாபாத் சிறுமி கொலை வழக்கு: காவல்துறை மற்றும் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

-

- Advertisement -

உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்தில் சிறுமி பாலியல் கொலை வழக்கில் உரிய விசாரணை நடத்தாத காவல்துறைக்கும், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காத மருத்துவமனைக்கும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.சிறுமி பாலியல் வழக்கில், உரிய விசாரணை நடத்தாத காவல்துறை – உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்காசியாபத்தில் கடந்த வாரம் சிறுமி ஒருவர் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். முன்னதாக உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சிறுமியை அருகே இருந்த  தனியார்  மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றபோது உரிய சிரிச்சை அளிக்கவில்லை. பின்னர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்த நிலையில் சிறுமி உயிரிழந்தார்.

இந்த விவகாரத்தில் போலீசார் உரிய விசாரணை நடத்த வில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு, இந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவமனை மனிதநேயமற்ற முறையில் செயல்பட்டுள்ளது என்று  கண்டனம் தெரிவித்தது. சிறுமி கொலை வழக்கில், பாலியல் வன்முறை, போக்சோ பிரிவுகள் சேர்க்கப்படாததற்கு காவல்துறைக்கும் கடும் கண்டனத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

இதனைத் தொடர்ந்து காசியாபாத் காவல்துறை ஆணையர்  ஆவணங்களுடன் நேரில் ஆஜராக தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. மேலும் இந்த மனு தொடர்பாக பதிலளிக்க உத்தர பிரதேச மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

மதுரை சுங்கச்சாவடி அருகே விஜய்க்கு உச்சாக வரவேற்பு…வெயிலையும் பொருட்படுத்தாத ரசிகர்கள்…

MUST READ