spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"மாநிலங்களை ஒழிக்க பா.ஜ.க. நினைக்கிறது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

“மாநிலங்களை ஒழிக்க பா.ஜ.க. நினைக்கிறது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

-

- Advertisement -

 

"அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்வோம்!"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
Photo: DMK

‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா (Speaking For India) பாட்காஸ்ட்டில்’ பேசிய தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “மாநிலங்களை ஒழிக்க வேண்டும் என பா.ஜ.க. நினைக்கிறது. முதலமைச்சராக இருந்த போது, மாநில உரிமை பற்றி பேசிய நரேந்திர மோடி பிரதமரான பின் மாநில உரிமைகளைப் பறிக்கிறார். கூட்டாட்சி தன்மை என்னும் மலர்கள் நிறைந்த அற்புத பூந்தோட்டத்தைச் சிதைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது.

we-r-hiring

மாரடைப்பால் மரணம்- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

திட்டக் குழுவை கலைத்துவிட்டு சத்தே இல்லாத நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கினார் பிரதமர் நரேந்திர மோடி. சி.ஏ.ஜி. மூலம் பா.ஜ.க.வின் ஊழலை அம்பலப்படுத்திய அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சி.ஏ.ஜி. ஊழலை அம்பலப்படுத்திய அதிகாரிகளை விரைவாக மாற்றியுள்ளது பா.ஜ.க. அரசு.

இந்தியாவின் ஜனநாயக அமைப்பை பா.ஜ.க. சிதைக்கிறது. ஆர்.எஸ்.எஸ். விரும்பும் சர்வாதிகார ஆட்சியை அமைக்க பா.ஜ.க. அமைக்கிறது. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கட்சிகளை உடைத்து எம்.எல்.ஏ.களை விலைக்கு வாங்குகிறது. மாநில அரசின் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசின் வாசலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

“இந்தியா கூட்டணி தற்போது பலவீனமாக உள்ளது”- உமர் அப்துல்லா பகீர் பேட்டி!

ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் காலத்தை நீட்டிக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கூறிவிட்டார். மத்திய அரசின் ஜி.எஸ்.டி.யால் மாநில அரசுகளின் நிதி நிலைமை ஐ.சி.யூ.வில் உள்ளது. நிதி ஒதுக்கீடு குறைவால் கடந்த 19 ஆண்டுகளில் தமிழகத்திற்கு சுமார் 85,000 ரூபாய் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 10,000 கோடிக்கும் மேல் தமிழ்நாட்டுக்கு இழப்பு ஏற்படப் போகிறது.

மாநிலங்களுக்கு அதிக நிதியைத் தருவோம் எனக் கூறிய பா.ஜ.க. ஆட்சியின் உண்மை முகம் இதுதான்” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

MUST READ