தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (TNCC) தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், உள்ளூர் பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவும் ‘டியூஷன் அக்கா திட்டம்’ என்ற புதிய வாக்குறுதியை அளித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள படித்த உள்ளூர் பெண்களைக் கொண்டு, அந்தந்தப் பகுதி மாணவர்களுக்கு மாலை நேரப் பயிற்சி வகுப்புகள் (Tuition) நடத்தப்படும். இதன் மூலம்:
பள்ளிப் பாடங்களில் உள்ள சந்தேகங்களைத் தீர்க்கவும், கூடுதல் கல்வி வழிகாட்டுதலைப் பெறவும் தகுதியான ஆசிரியர்கள் (அக்காக்கள்) கிடைப்பார்கள்.

உயர்கல்வி முடித்து வேலைக்காகக் காத்திருக்கும் உள்ளூர் பெண்களுக்குத் தகுந்த ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.
தேர்தல் அறிக்கை வெளியீடு:
காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதியில் உள்ள மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கல்விப் பணியோடு மகளிர் மேம்பாட்டையும் இணைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில், மற்ற கட்சிகளுக்குப் போட்டியாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள இந்த ‘டியூஷன் அக்கா’ திட்டம் அரசியல் வட்டாரத்தில் முக்கியப் பேசுபொருளாக மாறியுள்ளது.
ரயில்வே வருவாய் கணக்கு: தட்கல் மற்றும் டிக்கெட் ரத்து கட்டண விவரங்களை அளிக்க மத்திய அரசு மறுப்பு
