Homeசெய்திகள்கட்டுரைஸ்டாலினுக்காக திரண்ட வன்னியர்கள்... அன்புமணிக்கு வெறி வருதா?

ஸ்டாலினுக்காக திரண்ட வன்னியர்கள்… அன்புமணிக்கு வெறி வருதா?

-

- Advertisement -

வன்னியர் இடஒதுக்கீடு போராளிகளின் குடும்பங்களுக்கு பாமக எதுவும் செய்யவில்லை என்றும், அவர்களுக்கு தமிழக அரசு மணி மண்டபம் அமைத்திருப்பதன் மூலம் அவர்களை வெளி உலகிற்கு அடையாளப்படுத்தி உள்ளதாகவும் காடுவெட்டி குருவின் உறவினர் காடுவெட்டி மனோஜ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் வன்னியர் இடஒதுக்கீட்டுப் போராளிகளுக்கான மணிமண்டபத் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என பாட்டாளி மக்கள் தலைவர் அனபுமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பதில் அளித்து பாமக முன்னாள் நிர்வாகி காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:  வன்னியர்களால் மட்டும் உருவாக்கப்பட்ட ஒரு கட்சி பாமக. அப்படி பாமக வன்னியர் மக்களுக்கு இதுவரை என்ன செய்துள்ளது என்று ஒரு மேடையில் கூட அன்புமணி சொல்லவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடஒதுக்கீடு போராளிகளுக்கு மணி மண்டபத்தை திறந்துவைத்துள்ளது அவர்களுக்கு கிடைத்த மரியாதை ஆகும். அன்புமணி இதுவரைக்கும் இந்த 25 குடும்பத்தை சேர்ந்த ஒருவரை இடத்தில் கூட அடையாளப்படுத்தி உள்ளாரா? வன்னியர் சமுதாயத்தை எந்த இடத்திலும் அடையாளப்படுத்தவில்லை. சமுதாயத்தின் வளர்ச்சிக்கு எங்குமே போராடவில்லை.  அப்படி இருக்கும்போது எப்படி நீங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குற்றம் சாட்டலாம். இடஒதுக்கீட்டு போராளிகள் மீது துப்பாக்சிசூடு நடத்த உத்தரவிட்டவர் எம்.ஜி.ஆர். அவர் முதலில் புரிந்து கொள்ளவில்லை, மருத்துவர் ராமதாஸ் பேசி புரியவைத்தார் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார். அப்படி புரிந்துகொண்டு எம்.ஜி.ஆர் என்ன செய்தார். பின்னர் ஆட்சிக்கு வந்த கலைஞர், ராமதாஸ், மற்ற மாவட்டங்களை சேர்ந்த வன்னியர் சங்க தலைவர்களை கூப்பிட்டு இடஒதுக்கீடடை வழங்கினார்.

அன்புமணி, ராமதாஸ் ஆகியோர் திமுக  மற்ற கட்சிகளுடன் சேர்த்து தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி ஏமாற்றி வழங்கி விட்டதாக தெரிவிக்கின்றனர். சரி அவர்கள் 30 வருஷங்களாக என்ன செய்து கொண்டிருந்தார்கள். திமுகவுடன் சேர்ந்துதானே சுகாதார அமைச்சர் பொறுப்பு வாங்கினார்கள். அப்படி மத்திய அமைச்சராக இருக்கும்போது, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தியாகிகளின் குடும்ப பெண்களுக்கு ஏதாவது வேலை வாங்கி கொடுத்திருக்கலாம். கலைஞர் தியாகிகளின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் மற்றும் 3 லட்சம் இழப்பீடு வழங்கினார்கள். அந்த பணத்தை வாங்கி தின்றது ராமதாஸ் குடும்பம்தான். ராமதாசும், அன்புமணியும், பாமக கட்சியை ஒரு எம்.எல்.எம் நிறுவனமாக நினைக்கின்றனர். காடுவெட்டி குரு வன்னியர் சமுதாய மக்களுக்கு கல்வி அறக்கட்டளை அமைப்பதற்காக இடத்தை தேர்வு செய்து, அறக்கட்டளைக்காக பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வன்னியர்களிடம் நிதி திரட்டினார். இதற்கு ராமதாஸ் ரு.10 ஆயிரம் வழங்கினார். வன்னியர் கல்வி அறக்கட்டளையில் காடுவெட்டி குரு இருந்தவரை மக்களுக்கு இலவமாக கல்வி வழங்கப்பட்டது. அவரது மறைவுக்கு பின்னர் தற்போது ராமதாஸ் கல்வி அறக்கட்டளை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அங்கு சீட்டுக்கு 2 லட்சம் பணம் வசூலிக்கப்படுகிறது. நான் ராமதாஸ் அறக்கட்டளைக்கு வழங்கிய 10 ஆயிரத்துக்கு பதிலாக, 100 மடங்கு பணம் தருகிறேன். நீங்கள் வன்னியர் அறக்கட்டளையை அரசிடம் ஒப்படைத்து விடுங்கள். நாளையே ராமதாஸ் அறக்கட்டளையில் வன்னியர்களுக்கு கல்வி இலவசம் என்றும் அறிவிக்க வேண்டும்.

30 ஆண்டுகளாக அன்புமணி ராமதாஸ் இந்த கட்சியை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். ராமதாஸ் அன்று மக்களுக்காக போராடினார். அன்புமணி கட்சிக்குள் வந்ததில் இருந்து சுகாதார அமைச்சராக இருந்தார். தற்போது கட்சி தலைவராக உள்ளார். இளைஞரணி தலைவராக இருந்தார். ராஜ்யசபா எம்.பி ஆக இருந்தார். முதலமைச்சர் வேட்பாளர் ஆக்கினார்கள். அவர் இந்த சமுதாயத்திற்கு செய்தது என்ன?. எம்ஜிஆர் புரியாமல் செய்துவிட்டார். கலைஞர் ஏமாற்றிவிட்டார் என்கிறீர்கள். ஜெயலலிதா 4 முறை குருவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போட்டார். அப்படி ஒன்றும் அவர் தேச விரோதி இல்லை. அப்போது ஜெயலலிதா எதுவும் செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமி 4 வருடங்கள் ஆட்சியில் இருந்தார். நீங்கள் வன்னியர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் ஆட்சிக்கு வந்த உடன் செய்திருக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பு பாமகவை போராட்டம் நடத்த சொல்லிவிட்டு, 10.5 சதவீத உள் இடஓதுக்கீடு வழங்கினார்கள். அன்புமணி – எடப்பாடி சேர்ந்து நடத்திய நாடகத்தில் வன்னியர் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினார்கள். இது உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி 2021 தேர்தலில் இடஒதுக்கீடு வழங்கினார்கள். இன்று 2025 ஆகிவிட்டது. உங்களுக்கு ஆட்சி போகிவிட்டது. நீங்கள் வழங்கிய இடஓதுக்கீடு விவகாரமும் போய்விட்டது. அது தொடர்பாக இதுவரை எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவே இல்லை. எடப்பாடி தொகுதியில் வெற்றி  பெறுவதற்காக 10.5 சதவீத இடஒதுக்கீடு என நாடகம் ஆடுகிறார்.

எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
File Photo

இடஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு மணி மண்டபம் தானே கட்டுகிறீர்கள், வேறு என்ன செய்தீர்கள் என பாமக தலைவர் அன்புமணி  கேட்கிறார். ஆனால் 25 பேரின் குடும்பத்தில் ஒருவரின் பெயரை கூட சொல்லாமல் தானே நீங்கள் இருக்கிறீர்கள். இந்த 37 ஆண்டுகாலத்தில் ஆண்டிற்கு ஒரு லட்சம் எடுத்து வைத்திருந்தால் கூட 25 பேருக்கு வீடு கொடுத்திருக்கலாம். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின் படி வடமாவட்டங்களில் பெரும்பான்மையான வன்னிய மக்கள் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இடஒதுக்கீடு போராட்டத்தின்போதும் 2 லட்சம் மக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்குகளையும் தள்ளுபடி செய்தவர் கலைஞர்தான். காடுவெட்டி குரு 25 தியாகிகளையும் ஆண்டுதோறும் கவனித்துக்கொண்டார். அவர்களுக்கு இலவச சட்ட உதவிகளையும் வழங்கினார். ராமதாசும், அன்புமணியும் வன்னியர் சமுதாயத்தை சீரழிக்கவும், சமுதாயத்தை அடகுவைத்து மேலும் மேலும் பெட்டி வாங்கும் வேலையைதான் செய்கின்றனர். 2021 தேர்தலின்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து தனது வீட்டில் அன்புமணி விருந்துவைத்தார். இந்த போராட்ட தியாகிகள் 25 பேரையும் உங்கள் வீட்டு வாசலில் ஏற்றியுள்ளீர்களா?.

இன்று அரசு கட்டிய மணிமண்டபம் காரணமாக அவர்கள் யார் என்றாவது வெளியே தெரிகிறது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் மாநில அரசு செய்யவில்லை. அவர்கள் மத்திய அரசுதான் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிறார்கள். அப்படி எனறால் அதற்கான அழுத்தம் கொடுக்கும் வேலையை அன்புமணி செய்ய வேண்டும். மாநில அரசு செய்வதையும் தடுக்கிறீர்கள். இடஓதுக்கீடு போராளிகளின் குடும்பங்களுக்கு  வீடு கட்ட நான் முயற்சித்தால் நெருக்கடி தருகிறார்கள். 2016ல் பாமக தனித்து நிற்க காரணம் காடுவெட்டி குரு ஆவார். அவர் கூட்டணி அமைத்தால் வன்னியர் சங்கத்தை பிரித்துச்சென்று 30 தொகுதியில் தனியாக போட்டியிடுவேன் எச்சரிக்கை விடுத்ததால் அந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டார்கள், இவ்வாறு அவர்  தெரிவித்தார்.

 

MUST READ